உ.பி வளர்ச்சியில் சிறு குறு தொழில் நிறுவனங்களின் பங்கு கணிசமான அளவில் இருக்கும்! யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேச வளர்ச்சியில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பங்கு கணிசமான அளவில் இருக்கும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஏற்கெனவே இருந்த டபுள் என்ஜின் அரசு தற்போது ட்ரிபிள் என்ஜின் அரசாக மாறியிருக்கிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "கடந்த ஆட்சி காலத்தில் உத்தரப் பிரதேசத்தின் பெருமைகள் புறக்கணிக்கப்பட்டன. ஆனால் பாஜக ஆட்சியில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. நாங்கள் ஒவ்வொரு மாவட்டத்தின் தனிச்சிறப்பையும் கவனித்து அந்த தனிச்சிறப்புகளை மேலும் மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டோம்.
உதாரணமாக ஹாபூரின் அப்பளம் மிகவும் பேமஸானது. இந்த அப்பளத்தை சர்வதேச சந்தைக்கு நாங்கள் கொண்டு சென்றோம். அப்பள உற்பத்தியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தோம். எனவே இந்த அப்பளம் இந்தியா முழுமைக்கும் பேமஸானது. தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்த அப்பளத்தை தேடி தேடி வாங்குகின்றனர். எனவே அதிக அளவில் அப்பளம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
இது ஹாபூரில் மக்களுக்கு மறுவாழ்வை அளித்திருக்கிறது. ஆக பாஜக அரசு மக்கள் நலனில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. பாஜக பொறுப்பேற்று கடந்த 7 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், வீடுகள், கழிப்பறைகள், ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் மற்றும் ஜன்தன் கணக்குகள் ஆகியவை கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளித்துள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.35 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சியில் சிறுகுறு வளர்ச்சி நிறுவனங்களின் பங்கு கணிசமான அளவில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications