இனிப்பாக மாறிய கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம்! பாஜக அரசுதான் காரணம்.. யோகி பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் இனிப்பாக மாறியுள்ளதாகவும், கரும்பு விவசாயம் பாஜக ஆட்சியில் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, கடந்த காலங்களை விட பாஜக ஆட்சி காலத்தில் மாநிலத்தில் கூடுதல் முதலீடுகள் குவிந்துள்ளது. 2017ம் ஆண்டுக்கு முன்னர் வரை உத்தரப் பிரதேசத்தில் குண்டர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது, பாஜக தற்போது மக்களுக்கான, விவசாயிகளுக்கான, தொழிலாளர்களுக்கான ஆட்சியை வழங்கி வருகிறது.

CM Yogi is proud that it is the BJP government that has made the livelihood of sugarcane farmers sweeter

வேளாண் தொழிலை ஊக்கப்படுத்தும் விதமாக மானிய விலையில் டிராக்டர்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கரும்பு விவசாயம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதன் மூலம் கரும்பு மட்டுமல்லாது எத்தனாலும் தயாரிக்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் வேளாண்மை என்பது ஒரு நஷ்டமடையும் தொழிலாக இருந்தது. வயல்களில் கரும்பு எரிக்கப்பட்டது. அதேபோல மாதத்தில் சில நாட்கள் மட்டுமே கரும்பு ஆலைகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இது லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றப்பட்டிருக்கிறது.

முன்பை விட விவசாயிகள் தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கரும்பை அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு உரிய ஆதார விலை வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகளின் தற்கொலை குறைந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+