அம்மாவை வந்து பாருடா! உன் நினைப்பிலேயே இருக்காங்க! ஆதித்யநாத்திடம் சகோதரி உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச முதல்வராக இரண்டாவது முறையாக நாளை யோகி ஆதித்யநாத் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், ‛‛பதவியேற்புக்கு முன்பு தயவு செய்து அம்மாவை வந்து பாருடா... வயது முதிர்வில் உனது நினைப்பிலேயே இருக்கிறார். அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிய பின் பதவியேற்று கொள்'' என யோகி ஆதித்யநாத்துக்கு அவரது சகோதரி சசி சிங் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றது. தனித்து ஆட்சியை பிடித்த நிலையில் 2வது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

அதன்படி இன்று பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட பாஜக முன்னணி தலைவர்களும், பிற கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

18 வயதில் வெளியேறினார்

18 வயதில் வெளியேறினார்

இந்நிலையில் தான் யோகி ஆதித்யநாத்தின் குடும்பம் உத்தரகாண்ட் மாநிலம் பவ்ரி கர்வால் அருகே பஞ்சூர் கிராமத்தில் வசிக்கிறது. அங்கு அவரது சகோதரி சசி சிங் சிறிய கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் யோகி ஆதித்யநாத் குறித்து அவர் கூறுகையில் ‛‛யோகி ஆதித்யநாத் வீட்டில் இருந்து தனது 18வது வயதில் உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூருக்கு சென்றார். தான் துறவியாக மாறுவதாக கூட வீட்டில் கூறாமல் யோகி ஆதித்யநாத் வெளியேறினார். அரசியலில் கால்பதித்து எம்பி, முதல்வராக மாறியுள்ளார்'' என பெருமையாக தெரிவித்தார்.

 அம்மாவை வந்து பாருடா

அம்மாவை வந்து பாருடா

மேலும், ‛‛தயவுசெய்து ஒருமுறை வீட்டுக்கு வந்து அம்மாவை பாருடா... அவரோடு கொஞ்சம் நேரம் பேசுடா... நமது அம்மாவுக்கு அதிக வயதாகி விட்டது. ஆனாலும் உன்னை பற்றியே நினைத்தபடி இருக்கிறார். பதவியேற்புக்கு முன்பு ஒருமுறை வந்து அம்மாவை பார்த்துவிட்டு செல்... அவரது ஆசீர்வாதத்துடன் நீ (யோகி ஆதித்யநாத்) முதல்வராக பதவியேற்று கொள்ள வேண்டும்'' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தந்தையிடம் கேள்வி

தந்தையிடம் கேள்வி

இதுதவிர சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தை அவரது சகோதரி சசிசிங் பகிரந்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛சிறுவயதில் யோகி ஆதித்யநாத், தந்தையிடம் தன் குடும்பத்தை மட்டும் பார்ப்பதாக குற்றம்சாட்டுவார். அதற்கு தந்தை நான் ரூ.85 மட்டும் தான் சம்பாதிக்கிறேன். என்னால் மற்றவர்களை பற்றி நினைக்க முடியாது என்பார். மேலும், "நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பார்க்கிறேன்'' என தந்தை கூறுவார். தற்போது யோகி ஆதித்யநாத் தான் யார் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்'' என நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

 வாரிசு அரசியலில் விருப்பமில்லை

வாரிசு அரசியலில் விருப்பமில்லை

மேலும், இந்தியாவில் அதிக சட்டசபை தொகுதிகள் கொண்ட மாநிலத்தை யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்கிறார். நீங்கள் சிறு கடை வைத்துள்ளீர்களே. இதைவிட்டுவிட்டு அரசியலில் ஈடுபடலாமே என கேள்வி கேட்டதற்கு, ‛வாரிசு அரசியலை யோகி ஆதித்யநாத் உள்பட குடும்பத்தினர் யாரும் விரும்புவது இல்லை. இதனால் தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறோம்''என்றார்.

 இயற்பெயர் என்ன

இயற்பெயர் என்ன

யோகி ஆதித்யநாத் 1972, ஜூன் 5ல் பிறந்தார். இவரது தந்தை பெயர் ஆனந்த் சிங், தாய் பெயர் சாவித்ரி தேவி. இவரது தாய் சாவித்ரி தேவி இன்னும் சிறிய வீட்டிலேயே உத்தரகாண்ட் மாநிலம் பவ்ரி கர்வால் அருகே பஞ்சூர் கிராமத்தில் வசித்து வருகிறார். யோகி ஆதித்யநாத்தின் இயற்பெயர் அஜய் சிங் ஆகும். ஆனால் அவர் கோரக்பூர் மடத்தில் இணைந்த பிறகு பெயர் யோகி ஆதித்யநாத் என மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+