லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடபாவமே... காங்கிரஸ் வேட்பாளரை முந்திய நோட்டா.... பீகார் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் சம்பவம்

Google Oneindia Tamil News

லக்னோ: பீகார் மாநிலம் போச்சான் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை விட நோட்டோ 1,631 ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ள சம்பவம் இன்று நடந்தது.

மேற்கு வங்கம் மாநிலம் பாலிகங்கே, சத்தீஸ்கார் மாநிலம் கைராகர், பீகார் மாநிலம் போச்சான், மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் வடக்கு என 4 சட்டசபை தொகுதிகளுக்கும், மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவை புரட்டிய புயல், வெள்ளத்தில் 341 பேர் பலி.. இரண்டே நாளில் கொட்டிய 6 மாத மழை தென்னாப்பிரிக்காவை புரட்டிய புயல், வெள்ளத்தில் 341 பேர் பலி.. இரண்டே நாளில் கொட்டிய 6 மாத மழை

இந்த 5 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 12ல் அமைதியான முறையில் தேர்தல்கள் நடந்தன. இன்று ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஆர்ஜேடி கட்சி வெற்றி

ஆர்ஜேடி கட்சி வெற்றி

இதில் பீகார் மாநிலத்தின் பேச்சான் தொகுதியில் மொத்தம் 59.20 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. ஓட்டு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்தது. ஓட்டு எண்ணிக்கை முடிவில் இந்த தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம்(ஆர்ஜேடி) கட்சி வேட்பாளர் அமர் குமார் பஸ்வான் 82,562 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.

பாஜக தோல்வி

பாஜக தோல்வி

இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 45 ஆயிரத்து 889 ஓட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் விகாஷில் இன்சான் கட்சி வேட்பாளர் கீதா குமாரி 29,276 ஓட்டுக்கள் பெற்று 3வது இடத்தை பிடித்திருந்ததார். இதனால் வேட்பாளர் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு 4வது இடம் தான் கிடைத்தது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தருண் சவுத்ரி வெறும் 1336 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார்.

காங்கிரஸை முந்திய நோட்டோ

காங்கிரஸை முந்திய நோட்டோ

இந்த தோல்வி மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது போச்சான் தொகுதியில் யாருக்கு ஓட்டளிக்க விரும்பவில்லை என்பதற்கான ‛நோட்டோ' மொத்தம் 2967 ஓட்டுக்களை பெற்றுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் வேட்பாளர் தருண் சவுத்ரி நோட்டோவை விட 1,631 ஓட்டுக்கள் பின்தங்கியுள்ளளார். மேலும் நோட்டோவுக்கு ஒருவர் தபால் ஓட்டு செலுத்தி இருந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு யாரும் தபால் ஓட்டு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி

பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி

பீகாரில் நிதிஷ் குமார் முதல்வராக இருக்கும் நிலையில் அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் தான் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி செய்கிறது. இருப்பினும் கூட்டணி செல்வாக்கு பாஜகவுக்கு கைக்கொடுக்கவில்லை. இதனால் தான் போச்சான் சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளர் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
In Bihar Bochahan assembly constituency by election results today announced. As per results NOTA Gets More than 1,631 votes Compared With Congress candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X