அவலம்.. காட்டிக்கொடுத்த மழை.. கொத்து கொத்தாக வெளியே வந்த பிணங்கள்.. உ.பி கங்கை கரையில் கொடூரம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கங்கை நதி கரையில் புதைக்கப்பட்ட பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக உத்தர பிரதேசத்தில் சில இடங்களில் மழை பெய்த நிலையில் கரையோரத்தில் புதைக்கப்பட்ட உடல்கள் வெளியே தெரிய தொடங்கி உள்ளன.

Recommended Video

    Bihar-ல் கங்கை நதிக்கரையில் ஒதுங்கிய ஏராளமான சடலங்கள்.. Corona உயிரிழப்புகளா என விசாரணை

    உத்தர பிரதேசம், பீகார் ஆகிய இரண்டு மாநிலங்கள் வழியாக ஓடும் கங்கை நதியில் கடந்த ஒரு வாரமாக கொத்து கொத்தாக மனித உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அதிகாரபூர்வ கணக்கின்படி இதுவரை கங்கை நதியில் இருந்து 120-130 பிணங்கள் மீட்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    ஆனால் உண்மையில் உத்தர பிரதேசத்தில் மட்டும் 2000க்கும் அதிகமான பிணங்கள் கங்கையில் இருந்து மீட்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இவை எல்லாம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பிணங்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

    எங்கு

    எங்கு

    கடந்த வாரம் பீகாரின் பக்சர் கிராமத்தில் இருந்து 71 உடல்கள் மீட்கப்பட்டன. அதன்பின் உத்தர பிரதேசத்தின் பாலியா, உன்னாவ், காசிபூர், கான்பூர், கண்ணுஜ் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல நூறு உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் உண்மையில் மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டும் என்கிறார்கள்.

    எத்தனை

    எத்தனை

    கங்கை நீரில் மிதந்து வந்த பிணங்கள் போக பல நூறு உடல்கள் உன்னாவ், காசிபூர், கான்பூர், கண்ணுஜ் ஆகிய மாவட்டங்களில் கங்கை நதிக்கு அருகே புதைக்கபட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கை நதியின் கரையில் லேசாக குழி தோண்டி இந்த உடல்களை புதைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளின் உடல்களை இரவோடு இரவாக வந்து இப்படி புதைத்து செல்கிறார்கள்.

    கணக்கு

    அதிலும் நேற்று பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ஷிரீங்வேர்பூர் காட் என்ற பகுதியில் கங்கை நதி ஓரத்தில் பல நூறு பிணங்கள் நேற்று இப்படி கண்டுபிடிக்கப்பட்டன. நேற்று மழை பெய்த நிலையில் நதி ஓரத்தில் புதைக்கப்பட்ட பிணங்களில் மேல் மூடப்பட்டு இருந்த மணல் நீரில் அடித்து சென்றது. இதில் பல பிணங்கள் வெளியே தெரிய தொடங்கியது.

    மோசமான நிலை

    மோசமான நிலை

    இரவோடு இரவாக இங்கு வந்து பிணங்கள் புதைத்துவிட்டு சென்றுள்ளனர். அதிலும் சரியாக புதைக்காமல் மேலோட்டமாக மணலை போட்டு மூடி உள்ளனர். இதனால் ஒரு இரவு மழைக்கே பிணங்கள் வெளியே வர தொடங்கி உள்ளன. இந்த புகைப்படங்கள் இங்கு 80-100 பிணங்கள் இப்படி புதைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பிரயாக்ராஜ்

    பிரயாக்ராஜ்

    பிரயாக்ராஜின் கங்கை கரையோரம் முழுக்க இன்றும் பல பிணங்கள் இப்படி மீட்கப்பட்டு உள்ளது. கங்கை கரையின் இன்னொரு பக்கமும் இன்று இதேபோல் மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. புனிதமான கங்கை நதியில் பிணங்கள் மிதக்கும் அவல நிலை உத்தர பிரதேச பாஜக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+