எங்கள் ஓட்டுக்களை பாஜகவினர் திருடிவிட்டனர்.. ஃபரீதாபாத்தில் தலித் பெண்கள் பரபரப்பு புகார்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் பெண்களின் வாக்குகளை பாஜகவினர் திருடிவிட்டதாக ஃபரிதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 12-ஆம் தேதி 6-ஆம் கட்ட தேர்தலின் போது ஃபரிதாபாத் தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் வாக்களிக்க ஆசாட்டி கிராமத்தைச் சேர்ந்த விவேசனா (23) என்ற பெண் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்றார்.
முதல் முறையாக வாக்களிக்கும் அவர் 88-ஆவது வாக்குச் சாவடி மையத்தில் ஒரு மணிநேரமாக நின்று கொண்டிருந்தார். பின்னர் அவரது முறை வந்த போது வாக்களிக்க சென்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தை பார்த்தார். அதில் வாக்களிக்க முயன்ற போது அந்த வாக்குச் சாவடியின் பாஜக ஏஜென்ட் கிரிராஜ் சிங் வேகமாக வந்து யானை சின்னத்துக்கு கீழே இருந்த பாஜகவின் தாமரை சின்னத்துக்கு வாக்களித்துவிட்டார்.

அழுத்தி
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், என்னுடைய வாக்கை நீங்கள் ஏன் அளித்தீர்கள் என கேட்டார். அதற்கு அவர் வாக்களித்துவிட்டேன். முடிந்துவிட்டது என கூறிவிட்டு அவரது இருக்கையில் அமர்ந்து விட்டார். பின்னர் யானை சின்னத்துக்கு நேராக உள்ள பொத்தானை அந்த பெண் அழுத்தி பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

மறு தேர்தல்
இது போன்ற ஏராளமான வாக்காளர்களின் ஓட்டுகளை போட்டதாக கிடைக்கப் பெற்ற வீடியோ ஆதாரத்தை கொண்டு கிரிராஜ் சிங் கைது செய்யப்பட்டார். இதையடுத்து வரும் மே 19-ஆம் தேதி அந்த வாக்குச் சாவடிக்கு மறு தேர்தல் நடைபெறுகிறது.

வீடியோ
எனினும் இந்த புகாரை சிங் மறுத்தார். இதையடுத்து வாக்குச் சாவடி அதிகாரியையும் இடைநீக்கம் செய்த தேர்தல் ஆணையம் மறுவாக்குப் பதிவுக்கு புதிய அதிகாரிகளை நியமித்துள்ளது. முதல் வீடியோவில் கிரிராஜ் சிங் விவேசனாவின் ஓட்டை போட்டது போல் மேலும் மூன்று பெண்களின் ஓட்டுகளையும் போட்டதை போலீஸார் கண்டனர்.

புகார்
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்களது வாக்குகளை வேறு ஒருவர் போட்டதாக தெரிவித்தனர். விவேசனா மட்டுமல்ல, அந்த வாக்குச்சாவடியில் 1222 வாக்காளர்கள் இருந்தனர். இதில் இன்னொரு வீடியோவில் வாக்களிக்க வந்த பெண்ணிடம் பாஜகவுக்கு அளிக்குமாறு சிங் பிரசாரம் செய்த காட்சிகள் கிடைத்துள்ளன. இதுபோல் ஏராளமான பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
-
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications