ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியம் உயர்வு.. குட்நியூஸ் சொன்ன யோகி ஆதித்யநாத்.. எவ்வளவு தெரியுமா?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆதரவற்ற பெண்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இந்நிலையில் மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் கான்பூரில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். ரூ.501 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு ரூ.688 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 1001 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
அதன்பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக யோகி ஆதித்யநாத் கூறியதாவது: மாநிலத்தில் பெண்களுக்கு உரிய மதிப்பு மற்றும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். இதனை செய்யாவிட்டால் மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்கள் என்பது முழுமையடையாத நிலையில் தான் இருக்கும்.
ஆதரவற்ற பெண்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்துவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தோம். அதன்படி ஆதரவற்ற பெண்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000ல் இருந்து உயர்த்தி வழங்கப்பட உள்ளது'' என்றார். லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா எனும் திட்டத்தின் கீழ் இந்த ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.1000 ஓய்வூதியம் கிடைத்து வருகிறது. இது ரூ.1,500 ஆக அதிகரிக்கப்படும் என உத்தர பிரதேச தேர்தல் வாக்குறுதியில் பாஜக தெரிவித்து இருந்தது. இந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பேபி ராணி மவுரியாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன.
இந்த விஷயத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய முடிவு எடுப்பார் என அமைச்சர் பேபி ராணி மவுரியா தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியம் விரைவில் உயர்த்தி வழங்கப்படும் என யோகி ஆதித்யாத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications