கரெக்ட்டா தாலி கட்டும்போது.. மணப்பெண்ணை பார்த்ததுமே மாப்ளைக்கு வந்த சபலம்.. அதுவும் மணமேடையில்! அடடே
லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடந்த திருமண நிகழ்வு ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது... என்ன காரணம்?
எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு கடைசி நிமிடங்களில் நின்றுபோய்விடுகின்றன.. அதிலும் வடமாநிலங்களில் திருமணங்களை மணப்பெண்களே நிறுத்திவிடுகிறார்கள்.

உதாரணத்துக்கு மாப்பிள்ளை வாய்ப்பாட்டை சொல்லாதது, உருது வார்த்தைகளை சொல்லாதது, உள்ளிட்ட வினோத காரணங்களுக்காகவும் மணப்பெண்கள் தங்கள் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவங்களும் அடிக்கடி நடந்துள்ளன. சில சமயம், திருமண வீடே, களேபரமாகி, கல்யாணம் நின்றுபோன சம்பவமும் உண்டு.
ஸ்வீட்: சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் ஒரு திருமணம் நடந்தது.. மணமேடையில், மணமகள் வெட்கத்தில் நிற்க, மாப்பிள்ளையோ மணமகளுக்கு, ஸ்வீட் எடுத்து ஊட்ட முயன்றார். ஆனால், மணப்பெண் ஸ்வீட் தனக்கு வேண்டாம் என்று தடுத்தார்.. மாப்பிள்ளையோ, வலுக்கட்டாயமாக ஸ்வீட் எடுத்து, மணப்பெண்ணின் வாய்க்குள் திணிக்க முயன்றார்..
இதனால் டென்ஷன் அடைந்த மணப்பெண், மாப்பிள்ளையை பளார் என்று ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.. உடனே மாப்பிள்ளைக்கும் கோபம் வந்து, அவரும் பதிலுக்கு மணமகளின் தலைமுடியை பிடித்து இழுத்து, பளார் பளார் என 4 அறை அறைந்தார். மணப்பெண்ணும் மாப்பிள்ளையின் சட்டையை பிடித்து இழுத்து அடித்தார்.. இவ்வளவும் மணமேடையில், எல்லார் முன்பும் அரங்கேறி, அத்துடன் கல்யாணமே நின்றுவிட்டது.
கல்யாணம்: இதோ இப்போது உத்தரபிரதேசத்தில் ஒரு கல்யாண கலாட்டா நடந்திருக்கிறது.. ஹாப்பூரை சேர்ந்த நபர் ஒருவர், தன்னுடைய 2 மகள்களுக்கும் ஒரே நாளில் கல்யாண ஏற்பாட்டினை செய்தார். நேற்று முன்தினம்தான் திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டு, மண்டபத்தில் உறவுனர்கள், நண்பர்கள் புடைசூழ்ந்து வந்தனர்.
முதல் பெண்ணின் திருமணம் சுமுகமாக நடந்துமுடிந்து விட்டது.. இப்போது 2வது பெண்ணின் திருமண நிகழ்வு ஆரம்பமானது. இதற்கான சடங்கில், மாப்பிள்ளையும், பெண்ணும் சந்திக்கும் நிகழ்வு ஆரம்பமானது. அதாவது, முதன்முதலாக இருவரும் அப்போதுதான் முதல்முதலாக சந்திக்கிறார்கள்.
மணப்பெண்: பெண்ணை முதன்முதலாக பார்த்ததுமே, மாப்பிள்ளை கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். இதனால் டக்கென மணமகளுக்கு முத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதைப்பார்த்து ஆத்திரமடைந்த பெண் வீட்டார், மணமகன் குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதற்கு மணமகன், மணமகளின் விருப்பத்தின்படியே முத்தம் கொடுத்ததாக காரணம் சொன்னார்.. ஆனால், இந்த காரணத்தை மணமகள் வீட்டில் யாருமே ஏற்கவில்லை..
பரபரப்பு: இறுதியில் வாய்வார்த்தை முற்றிப்போய், இரு தரப்பினரும் பலமாக மோதிக் கொண்டார்கள்.. இதில் 2 வீட்டினரும் படுகாயமடைந்தனர். கடைசியில் போலீஸுக்கு விஷயம் தெரிந்து, மண்டபம் வந்துவிட்டார்கள். தகராறில் ஈடுபட்ட 2 தரப்பினர் மீது, பொது இடத்தில் தொந்தரவு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்களாம்...!!












Click it and Unblock the Notifications