லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மருத்துவரை பளார் என கன்னத்தில் அடித்த நர்ஸ்.. பதிலுக்கு பதில் செம ஃபைட்.. வைரலாகும் வீடியோ!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண் செவிலியர் மற்றும் மருத்துவர் சரமாரியாக தாக்கி கொள்ளும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Recommended Video

    டாக்டருக்கு பளார் விட்ட நர்ஸ்… கொரோனா தந்த மன அழுத்தம்?

    உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பெருந்தொற்று காட்டுத் தீயாய் பரவி வருகிறது. அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

    ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பு முறையாக இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.

    டெல்லியில் நீதிபதிகளுக்கு கொரோனா சிகிச்சை... ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் 100 அறைகள் தயார் டெல்லியில் நீதிபதிகளுக்கு கொரோனா சிகிச்சை... ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் 100 அறைகள் தயார்

    அரசு மருத்துவமனை

    அரசு மருத்துவமனை


    இந்த நிலையில் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்றைய தினம் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் தகாத வார்த்தையால் பேசியதால் செவிலியர் அவர் கன்னத்தில் அறைந்தார்.

    பெண் செவிலியர்

    இதனால் கோபமடைந்த மருத்துவர் அந்த பெண் செவிலியரை திருப்பி தாக்கியதில் மருத்துவமனை களேபரம் ஆனது. அந்த சண்டை நடக்கும் போதே அங்கு ஒரு போலீஸ்காரர் இருந்தார். ஆனால் அவரோ சண்டையை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

    மருத்துவமனை ஊழியர்கள்

    மருத்துவமனை ஊழியர்கள்

    பின்னர் மற்ற போலீஸாரும் மருத்துவமனை ஊழியர்களும் சண்டையை விலக்கி விட்டனர். பெண் செவிலியர் மற்றும் மருத்துவரிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் பணிசுமை அதிகமாக இருந்ததாகவும் கூறினர்.

    நோயாளி

    நோயாளி

    இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறேன் என்றார். அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் இறந்துவிட்டார். இதனால் அவர் இறந்ததற்கான சான்று தருமாறு உறவினர்கள் கேட்டனர். பின்னர் அந்த செவிலியர் மருத்துவரிடம் சென்று கேட்டுள்ளார். உடனே விஷயத்தை எழுதி கொடு என கேட்டுள்ளார்.

    கோபம்

    கோபம்

    அந்த செவிலியர் கோபத்தில் இருந்த போது உறவினர்கள் மீண்டும் வந்து அந்த சான்று குறித்து கேட்டனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த செவிலியர் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று மருத்துவரிடம் வாக்குவாதம் செய்த போது இந்த கைகலப்பு நடந்ததாக தெரிகிறது.

    English summary
    Doctor and Nurse at Uttar Pradesh slaps each other in Rampur hospital. Video goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X