லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜிவ் காந்தி குறித்து விமர்சனம்.. பிரதமர் மோடிக்கு எதிராக ரத்தத்தில் ஆவேச கடிதம் எழுதிய இளைஞர்

Google Oneindia Tamil News

லக்னோ: ஊழலில் நம்பர் ஒன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி என்று பிரதமர் மோடி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமேதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு ரத்தத்தில் கடிதம் எழுதி உள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் ஜார்க்கண்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, ராஜீவ் காந்திதான் ஊழலில் நம்பர் ஒன்று என போபர்ஸ் ஊழலை குறிப்பிட்டு பேசினார்.

இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், மோடியின் பேச்சில் விதிமீறல் இல்லை என புகாரை நிராகரித்தது.

வேதங்கள் ஓதி.. மங்கள வாத்தியங்கள் இசைக்க... மழை வேண்டி மாநிலம் சிறப்பு யாகம் வேதங்கள் ஓதி.. மங்கள வாத்தியங்கள் இசைக்க... மழை வேண்டி மாநிலம் சிறப்பு யாகம்

அமேதி இளைஞர்

அமேதி இளைஞர்

இதனிடையே அமேதியை சேர்ந்த மனோஜ் காஷ்யப் என்ற இளைஞர், பிரதமர் மோடி ராஜீவ் காந்தி குறித்து பேசியதை கண்டித்து தேர்தல் ஆணையத்திற்கு தனது ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.

மோடியின் பேச்சு

மோடியின் பேச்சு

அந்தக் கடிதத்தில், ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடியின் பேச்சு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ராஜீவ் காந்திதான் வாக்குரிமைக்கான வயதை 18ஆக குறைத்து உத்தரவிட்டார். நாட்டில் பஞ்சாயத்து ராஜ் முறையை கொண்டு வந்தார், கணினி புரட்சியை நம் தேசத்தில் ஏற்படுத்தியவரும் அவரே. முன்னாள் பிரதமர் வாஜ்பாயே தன் கட்டுரை ஒன்றில் ராஜீவ் காந்தியை பாராட்டி உள்ளார்.

மக்கள் உள்ளங்களில்

மக்கள் உள்ளங்களில்

அமேதி மக்கள், ராஜீவ் காந்தியை அவமரியாதை செய்தவர்களை, அவரை கொன்றவர்களை போல் சமமாக பார்க்கிறார்கள். ராஜீவ் காந்தி அமேதி மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து வருகிறார்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

மறைந்த எங்கள் தலைவர் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு அறிவுரை சொல்லுங்கள். இந்தக் கடிதத்தை அரசியலுக்காக நான் எழுதவில்லை. மறைந்த எங்கள் தலைவர் மீதுள்ள பாசத்தினால் எழுதி உள்ளேன் இவ்வாறு கூறியுள்ளார். இதனிடையே இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

English summary
ex pm rajiv gandhi fan written letter by his blood against pm modi over his speech of rajiv gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X