Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அயோத்தியிலேயே தோல்வி! ம்ம்.. ஜெய் ஸ்ரீராம் சொல்லாமல்.. ஜெய் ஜெகன்நாத்துக்கு மாறிய மோடி! இதான் காரணம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: இன்று லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த பின் பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து பேசிய மோடி ஜெய் ஸ்ரீராம் சொல்லாமல்.. ஜெய் ஜெகன்நாத் என்று கூறியது கவனம் பெற்றது.

கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politics

543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக தனியாக 240 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மெஜாரிட்டி இல்லை: இப்போது உள்ள சூழலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்படுகிறது. தனி மெஜாரிட்டி பெற பாஜகவிற்கு 40 இடங்களுக்கு மேல் இன்னும் கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே கருதப்படுகிறது. பாஜகவிற்கு தனியாக மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் அவர்கள் ஆட்சி அமைப்பது கடினம். ஏனென்றால் மோடி பிரதமர் ஆவதற்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்காமல் போகலாம் என்ற நிலை உள்ளது.

அயோத்தியிலேயே தோல்வி: முக்கியமாக உத்தர பிரதேசத்தில் அயோத்தி கோவில் கட்டப்பட்ட பைசாபாத் தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்து உள்ளது.

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இதில் 2019 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 71 இடங்களில் வென்றது. பகுஜன் சமாஜ் 2019 தேர்தலில் போட்டியிடவில்லை. சமாஜ்வாதி 5 இடங்களில் வென்றது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் வென்றது.

2024 லோக்சபா தேர்தல்: 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 80 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை அனைத்து ஏழு கட்டங்களில் நடந்தது.அங்கே பாஜக, அப்னா தளம், லோக் தளம் போன்ற கட்சிகள் கூட்டணி வைத்தன.

எதிரே காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி வைத்தன. பகுஜன் சமாஜ் தனியாக போட்டியிட்டது.

தோல்வி முகம்; உத்தர பிரதேசத்தில் மாபெரும் அரசியல் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அங்கே பாஜகவை முந்திய இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸின் இந்தியா கூட்டணி 43 இடங்களில் முன்னிலை பெற்று அசத்தி உள்ளது. பாஜக கூட்டணி 36 இடங்களுக்கு சென்று உள்ளது.

அங்கே மிக மோசமான தோல்வியை நோக்கி பாஜக சென்று கொண்டு இருக்கிறது. அங்கே வாக்கு சதவிகித ரீதியாகவும் பாஜக படுதோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இருந்து திடுக்கிடும் வாக்குப் சதவிகிதங்கள் வெளியாகி வருகின்றன. - பாஜக+: 44.12% (பாஜக: 42.13%), இந்தியா: 42.7% (சமாஜ்வாதி: 31.98%, காங்கிரஸ்: 10.64%), பகுஜன் சமாஜ் கட்சி: 9.2%. ஆகிய வாக்குகளை பெற்று உள்ளன.

தோல்வி; இந்தியா இங்கே மிக அதிக அளவில் வாக்குகளை பெற்று உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் உத்தர பிரதேசத்தில் அயோத்தி கோவில் கட்டப்பட்ட பைசாபாத் தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்து உள்ளது.

சமாஜ்வாதி வேட்பாளர் ஆவதேஷ் பிரசாத் 554289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். லல்லு சிங் பாஜக சார்பாக 499722 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக 54567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளார்.

மோடி மாற்றம்: அயோத்தியிலேயே பாஜக தோல்வி அடைந்த நிலையில், இன்று லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த பின் பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து பேசிய மோடி ஜெய் ஸ்ரீராம் சொல்லாமல்.. ஜெய் ஜெகன்நாத் என்று கூறியது கவனம் பெற்றது.

இன்று பாஜக அலுவலகம் வந்த மோடி தொண்டர்கள் முன் பேசினார். அப்போது அவரின் முகம் சோகமாக காணப்பட்டது. முகம் தொங்கிய நிலையில் காணப்பட்டது. எப்போதும் இருக்கும் கலை அவரிடம் இல்லை. பாஜக ஆட்சி அமையுமா என்ற பதற்றம் உள்ள நிலையில் அவரின் முகம் வாடி உள்ளது.

இன்று தொண்டர்களை சந்தித்து பேசிய மோடி முதல் முறையாக ஜெய் ஸ்ரீராம் சொல்லாமல்.. ஜெய் ஜெகன்நாத் என்று கூறியது கவனம் பெற்றது. அவர் ஜெய் ஸ்ரீராம், ஜெய் சியா ராம் என்று கூறி வந்தார். முதல் முறையாக ஜெய் ஸ்ரீராமை அவர் பயன்படுத்தாமல் போய் உள்ளார். பூரி ஜெகன்நாத் உள்ள ஒடிசாவில் வென்றதை சொல்லும் விதமாகவும், சிவனை வணங்கும் விதமாகவும் மோடி ஜெய் ஜெகன்நாத் என்று கூறி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+