"மறைந்துபோன மனிதாபிமானம்" உயிருக்கு போராடியபடி உதவி கேட்டும் செல்போனில் வீடியோ எடுத்த அவலம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் அடிபட்டு ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடக்கும் சிறுமி உதவி கேட்டும் அவரை மீட்காமல் அங்கு கூடியிருந்தவர்கள் மனிதாபிமானம் இன்றி செல்போன்களில் வீடியோ எடுத்த சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் கன்னுஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 13-வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.

மாயமான சிறுமியை குடும்பத்தினர் தேடி அலைந்தனர். இந்த நிலையில், அருகில் உள்ள திறந்த வெளி இடத்தில் பலத்த காயங்களுடன் அந்த சிறுமி ரத்த காயங்களுடன் அடிபட்டு கிடந்தது தெரியவந்தது.

ரத்த காயங்களுடன் உதவி

ரத்த காயங்களுடன் உதவி

தலை உள்பட பல இடங்களில் ரத்தக் காயங்களுடன் அடிப்பட்டு உயிருக்கு போராடி வந்த சிறுமி உதவி அளிக்குமாறு குரல் கொடுக்கிறார். சிறுமி ஒருவர் அடிபட்டு கிடப்பதை கவனித்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டனர். ஆனால் யாருமே சிறுமியை காப்பாற்ற முன்வரவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.. வலியால் துடிக்கும் அந்த சிறுமியை ஒருவர் கூட காப்பாற்ற முன்வராமல் இருந்தனர்.

செல்போனில் படம் பிடித்தனர்

செல்போனில் படம் பிடித்தனர்

மனிதாபிமானம் மரித்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு ஒருவர் கூட சிறுமியை காப்பாற்றிவிட முன் வராமல் தங்கள் செல்போனில் சிறுமி அடிபட்டு உதவி கேட்கும் காட்சிகளை படம் பிடிப்பதிலேயே குறியாய் இருந்துள்ளனர். பல்வேறு கோணங்களில் சிறுமி உதவி கேட்டு அலறுவதை சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்தது வேதனையிலும் வேதனை.

இணையத்தில் பரவும் வீடியோ

இணையத்தில் பரவும் வீடியோ

கொஞ்சம் கூட சலனம் இன்றி உதவ எந்த அக்கறையும் காட்டாமல் வீடியோ எடுக்கும் காட்சிகளில் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், போலீஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டதா என கூட்டத்தில் நிற்கும் ஒருவர் கேட்கிறார். அப்போது ஒருவர் போலீஸ் அதிகாரியின் போன் நம்பரை கேட்கிறார். அதன்பிறகே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு இருக்கும் எனத்தெரிகிறது.

தனி ஆளாக மீட்ட போலீஸ்காரர்

தனி ஆளாக மீட்ட போலீஸ்காரர்

போலீசார் வந்து மீட்கும் வரை சிறுமி அதே இடத்தில் காயங்களுடன் வலியால் துடித்தபடி உயிருக்கு போராடியுள்ளார். தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை வெறும் கைகளால் தூக்கியபடி ஆட்டோ ரிக்‌ஷாவில் கொண்டு வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது போலீஸ்காரர் ஒருவர் சிறுமியை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏற்றி வைக்கும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

 ஆஸ்பத்திரியில் அனுமதி

ஆஸ்பத்திரியில் அனுமதி

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது, ''காயம் அடைந்த நிலையில் சிறுமி மீட்கப்பட்டு உள்ளார். சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் சிறுமியை அனுமதிக்கப்பட்டு இருக்கிறோம். சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டாரா? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+