சிறுவனாக இருந்தபோது பிளேட், கப்களை கழுவியிருக்கிறேன்.. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்!
லக்னோ: சிறு வயதில் பிளேட்களையும், கோப்பைகளையும் கழுவி டீ விநியோகம் செய்து தான் வளர்ந்தேன் எனவும் மோடிக்கும் டீக்குமான உறவு மிக ஆழமானது என்றும் உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 6 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் ஒரு கட்ட தேர்தல் மட்டுமே பாக்கியுள்ளது. வரும் ஜூன் 01 ஆம் தேதி 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கப்களை கழுவியிருக்கிறேன்: ஒரே ஒரு கட்ட தேர்தலே எஞ்சியிருப்பதால் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மத்தியில் ஆளும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெல்ல வெண்டும் என்ற இலக்குடன் வியூகம் வகுத்து வருகிறது. பாஜகவை ஆட்சி அரியணையில் அமரவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சார்பூரில் இன்று தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மோடி கூறியதாவது:- குழந்தையாக இருக்கும் போது கப்கள், தட்டுக்களை கழுவியிருக்கிறேன். டீ விநியோகித்துதான் நான் வளர்ந்தேன். மோடிக்கும் டீ-க்கும் இடையேயன உறவு ஆழமானது” என்று பேசினார்.
டீ விற்று தான் வளர்ந்தேன்: சிறு வயதில் தனது தந்தையுடன் ரயில்வே நிலையத்தில் டீ விற்றதாக கூறும் மோடி, இளம் வயதில் தான்பட்ட கஷ்டங்களை மேடையில் பகிர்ந்து உருக்கமாக பேசினார். தொடர்ந்து சமாஜ்வாடி கட்சியை கடுமையாக சாடிய பிரதமர் மோடி கூறியதாவது:- சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களித்து தங்கள் ஓட்டுக்களை வீணடிக்க யாருமே தயாராக இல்லை. மூழ்கிக் கொண்டு இருப்பவர்களுக்கு யாருமே வாக்களிக்க மாட்டார்கள்.
சமாஜ்வாடி மீது அட்டாக்: நிச்சயமாக ஆட்சியை பிடிக்க இருக்கும் கட்சிக்கு மட்டுமே பொதுமக்கள் வாக்களிப்பார்கள். இந்தியா கூட்டணி கட்சிகளை பற்றி நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொண்டார்கள். இந்தியா கூட்டணி கட்சிகள் மத, சாதியவாதம் பிடித்த கட்சிகள். குடும்ப கட்சிகள். இந்த கட்சிகள் ஆட்சி அமைக்கும் போதெல்லாம் இதை சார்ந்தே முடிவுகளை எடுக்கின்றன. யாதவ் சமூகத்தில் திறம்பட செயல்பட கூடிய பல தலைவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அகிலேஷ் யாதவ் சீட் வழங்குகிறார். சமாஜ்வாடி கட்சி ஆட்சியின் போது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு இருந்தது. மக்களின் உயிரோ உடமைகளை எப்போது பறிபோகும் என்றே தெரியாது. மாஃபியா கேங்கை கூட தங்களின் வாக்கு வங்கியாகவே சமாஜ்வாடி அரசு பார்த்தது.
இட ஒதுக்கீட்டை பறிக்க முயற்சி: இந்தியா கூட்டணி கட்சிகள் எஸ்.சி, எஸ்.டி, ஒபிசி மக்களின் இட ஒதுக்கீட்டை பறிக்க முயற்சிக்கிறது. மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க கூடாது என்று நமது அரசியல் அமைப்பு தெளிவாக கூறுகிறது. ஆனால், சமாஜ்வாடி கட்சி 2012-ல் தனது தேர்தல் வாக்குறுதியில் முஸ்லீம்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கூறியது” இவ்வாறு அவர் பேசினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications