ஸ்வீட்டால் வந்த பிரச்சினை.. மணமேடையிலேயே மாறி மாறி 'பளார்' விட்ட மணமக்கள்.. களேபரமான கல்யாண வீடு
லக்னோ: இனிப்பு ஊட்டிக்கொள்ளும் போது மணமேடையிலேயே மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. மணமேடை என்றும் பாராமல் அத்தனை உறவினர்கள் மத்தியிலும் இருவரும் மாறி மாறி சரமாரியாக அடித்துக்கொள்ளும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி... வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வுகளில் திருமண நாளும் கண்டிப்பாக இடம் பிடித்து இருக்கும்.

உற்றார் உறவினர்கள் புடை சூழ மணமக்கள் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் இந்த நிகழ்வில் மிகவும் தடல் புடலாக கொண்டாடுவார்கள். அவரவர் வசதிக்கேற்ப திருமண வீட்டில் விருந்து உபசரிப்புகளும் இருக்கும்.
போட்டோ ஷூட்கள், திருமண சடங்குகள் என அன்றைய நாள் முழுவதுமே திருமண வீடு களை கட்டியிருக்கும். சில இடங்களில் திருமண வீட்டில் சில வினோத சம்பவங்களும் அரங்கேறி விடுகின்றன. அதுவும் மணமகன் போதையில் திருமணத்திற்கு வருவது.. மணமகள் வீட்டில் தகராறு செய்வது என சில நேரங்களில் முகம் சுளிக்க வைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

அது தொடர்பான செய்திகளும் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகும். அந்த வகையில் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், மணமேடையில், மணமகனும் மணமகளும் நின்று கொண்டு இருக்கின்றனர். உறவினர்கள் மணமேடைக்கு கீழேயும் மணமேடையிலும் கலகலப்பாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
திருமண சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது, மணமகன் மணப்பெண்ணுக்கு இனிப்பு ஊட்டி விடுகிறார். ஆனால், ஸ்வீட் ஊட்டிவிட வேண்டாம் என்று மணப்பெண் மறுக்கிறார். ஆனாலும் வலுக்கட்டாயமாக மாப்பிள்ளை ஊட்டி விட்டதால் கோபம் அடைந்த பெண்ணோ மணமகனை கன்னத்தில் பளார் என ஒன்று விட்டார். பதிலுக்கு மாப்பிள்ளையும் திருப்பி அடிக்கவே அவர்களுக்குள் சண்டை முற்றியது.
மணமேடை என்றும் பாராமல் அத்தனை உறவினர்கள் மத்தியிலும் இருவருமே சரமாரியாக அடித்துக்கொண்டனர். கொஞ்சம் கூட சளைக்காமல் மாறி மாறி அடித்துக்கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் பிடித்து சமாதானப்படுத்தினர். ஆனாலும் விடாமல் இந்த சண்டை நீடித்தது.

இந்த சண்டையை பார்த்து திருமண வீட்டினருக்கு வந்த உறவினர்கள்... மணம் முடிந்த நாளிலேயே இப்படி அடித்துக்கொள்கிறார்களே... என புலம்பாத குறைதான்... குழந்தைகள் போல மணமக்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. எனினும், இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது என்ற விவரம் இல்லை. நெட்டிசன்கள் பலரும் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்களா... இல்லை விவாகரத்து செய்கிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேபோல், நோ மீன்ஸ் நோ.. எனவே மணப்பெண்ணை கட்டாயப்படுத்துவது தவறுதான் என்றும் கூறியிருக்கிறார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில் இருவருமே விட்டுக்கொடுத்து சென்றால்தான் வாழ்க்கை இனிக்குமே தவிர.. இப்படி சண்டை போடுவதால் பிரிவுதான் ஏற்படும் என அட்வைஸும் செய்து இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications