Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆப்பிரிக்கன் கிளியை கடிக்கவிட்ட கணவர், ஹெச்ஐவி ஊசி செலுத்திய மாமியார் - அதிகரிக்கும் வரதட்சணை கொடுமை

Subscribe to Oneindia Tamil

லக்னோ: காலம் காலமாக வரதட்சணை பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இப்போதெல்லாம் வினோதமான முறையில் வரதட்சணை கொடுமைக்கு பெண்கள் ஆளாகி வருகின்றனர். சென்னையில் ஐடி ஊழியர் ஒருவர் தனது மனைவியை அறையில் அடைத்து வைத்து ஆப்பிரிக்கன் கிளியைக் கொண்டு கடிக்கவிட்ட சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் மருமகள் வரதட்சணை கொண்டு வராததால் ஆத்திரத்தில் மருமகளுக்கு ஹெச்.ஐ.வி. வைரஸ் ஊசியை மாமியார் செலுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும் சாதி ஏற்றத்தாழ்வு பிரச்சனைகள், வரதட்சணை கொடுமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்சனைகள் போன்றவை இன்றளவும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இப்போது யார் ஜாதி பார்க்கிறார்கள், இப்போது யார் வரதட்சணை கேட்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு மத்தியில் இன்றும் அந்த கொடூர நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாள்தோறும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியூட்டுகின்றன.

Chennai Dowry Africa parrot

சென்னையைச் சேர்ந்தவர் முகமது இக்ராம் ஐடி ஊழியர். புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்தவர் ஆஃப்ரின் ஷகிரா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்துக்காக மணப்பெண்ணின் வீட்டார் நகைகள், செல்போன் என்று கிட்டத்தட்ட 1 கோடியே 20 லட்சம் ரூபாயை செலவழித்துள்ளனர்.

இந்நிலையில், கூடுதலாக 50 பவுன் நகை கேட்டு அப்பெண்ணை முகமதுவின் குடும்பத்தார் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அப்பெண்ணை ஒரு அறையில் அடைத்து வைத்து ஆப்பிரிக்கன் கிளியை விட்டு கடிக்க வைத்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வரதட்சணை கேட்டு பாலியல் ரீதியாக மனைவியைக் கொடுமைப்படுத்தியதாக முகமது மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 5 பேர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மருமகள் வரதட்சணை கொண்டு வராததால் ஆத்திரத்தில் இருந்த மாமியார் மருமகளுக்கு ஹெச்.ஐ.வி. வைரஸ் ஊசியை செலுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டம், கங்கோவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கும் ஹரித்வாரில் உள்ள ஜஸ்வாலா பிரான் காலியார் என்ற பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி வெகுவிமரிசையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. தன்னுடைய பெண்ணின் திருமணத்துக்காக 15 லட்சம் ரூபாய் ரொக்கம், லட்சக்கணக்கான மதிப்பிலான நகைகள் போன்றவற்றை பெண் வீட்டார் மணமகன் வீட்டினருக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

ஆனாலும், மாப்பிள்ளையின் பெற்றோர் ஸ்கார்பியோ எஸ்யூவி கார் வேண்டும் என்றும், கூடுதலாக 25 லட்சம் ரூபாய் வரதட்சணையாக வேண்டும் என்று கேட்டு வந்துள்ளனர். எப்போது இதனை உங்கள் வீட்டினர் எப்போது கொடுப்பார்கள் என்று கேட்டு மருமகளை அனுதினமும் மாமியார் டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதையடுத்து, ஊர் பெரியவர்கள் மத்தியில் இந்த பிரச்சனை தொடர்பாக பஞ்சாயத்தில் பேசி தீர்க்கப்பட்டது.

பஞ்சாயத்தில் முடிவெடுக்கப்பட்ட பின்னரும் தன்னுடைய மருமகளை மாமியார் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். சில சமயங்களில் மன ரீதியான டார்ச்சர், சில சமயங்களில் கொடூரத்தின் உச்சமாக உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், உச்சகட்டமாக தனது மருமகளுக்கு ஹெச்ஐவி தொற்று சிரிஞ்சை பயன்படுத்தி மாமியார் ஊசி செலுத்தி நோய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால், அந்த இளம்பெண்ணின் உசல் தொடர்ந்த மோசமடையத் தொடங்கியுள்ளது. மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு ஹெச்ஐவி தொற்று உறுதி ஆகியுள்ளது. இதுதொடர்பாக அப்பெண்ணின் தந்தை போலீஸில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால், அந்தப் புகாரை வாங்காமல் போலீஸார் அலட்சியம் செய்துள்ளனர். இதையடுத்து, அந்தப் பெண்ணும், அவரது தந்தையும் சஹான்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அப்பெண்ணின் மாமியார், கணவர் உள்ளிட்ட உறவினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரப்பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, காங்கோ காவல் நிலையத்தில் பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனர்கள் ஆகியோர் மீது கொலை முயற்சி, கொடுமைப்படுத்துதல் மற்றும் வரதட்சணை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+