உ.பி.யில் பாஜகவிற்கு வரலாற்று வெற்றி! யோகி விஸ்வரூபம்! அத்தனை கருத்து கணிப்புகளும் அடித்து சொல்கிறது

உபியில் மீண்டும் பாஜக ஆட்சியே என்று இந்தியா டுடே எக்ஸிட் போல் தெரிவிக்கின்றன

Subscribe to Oneindia Tamil

லக்னோ: இன்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்து கணிப்புகளின்படி, பாஜகவே மீண்டும் உத்தரபிரதேசத்தில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.. இதில் இந்தியாடுடே வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் ஏராளமான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து, மாபெரும் வெற்றியை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச சட்டப் பேரவைக்கான 7-ம் கட்டத் தேர்தல் இன்று நடந்து முடிந்தது. உ.பி. மட்டுமின்றி 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் 10-ம் தேதி எண்ணப்படுகிறது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2 மாதங்களாக நடந்து முடிந்தது.

 பிந்தைய கணிப்பு

பிந்தைய கணிப்பு

உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகிறது. உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் போட்டியிடுகிறது... 4 முனை போட்டி என்றாலும், இதில் பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும்தான் நேரடி போட்டி ஏற்பட்டது.

கணிப்புகள்

கணிப்புகள்

இதனால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை எடுத்து கொண்டால், பாஜக 41.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது...

 காங்கிரஸ்

காங்கிரஸ்

அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி கட்சி 23.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.. அதேபோல, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 22.2 சதவீத வாக்குகள் கிடைத்தது. இரு கட்சிகளும் அதிக அளவு இடங்களை உபியில் கடந்த முறை பெற்றிருந்தனர்.. ஆனால், இந்த முறை இரு கட்சிகளுமே சற்று சறுக்கி உள்ளது.. பகுஜன் சமாஜ் சொல்லி கொள்ளும் அளவுக்கு இடங்களை பெறவில்லை.. காங்கிரஸோ கணக்கிலேயே இல்லை.. அப்படிதான் இந்த முறை அனைத்து எக்ஸிட் போல்களும் தெரிவித்துள்ளன.

ஆட்சி

ஆட்சி

NEWSX - POLSTART வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக 223 இடங்களில் வென்று ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது, சமாஜ்வாதி கட்சி 153 இடங்களை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சமாஜ்வாதி

சமாஜ்வாதி

CNN News18 வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக 240 இடங்களில் வென்று ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது, சமாஜ்வாதி கட்சி 140 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வெற்றி

வெற்றி

Matrize வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு படி பாஜக 265 இடங்களில் வென்று ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது, சமாஜ்வாதி கட்சி 123 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிராந்திய வாரியாக

பிராந்திய வாரியாக

இதில் பிராந்திய வாரியாக எடுத்து கொண்டாலும் பாஜகவே பிரதான இடங்களை பிடித்துள்ளது.. உ.பி. ரோஹில்கண்ட் பிராந்தியத்தில் மொத்தம் 53 இடங்களில் இந்தியா டுடே எக்ஸிட் போல் முடிவுகள் வெளிவந்துள்ளன.. அதில், பாஜக 30 இடங்களையும், சமாஜ்வாதி 21 இடங்களையும், பகுஜன் சமாஜ் 01 இடங்களையும் பெற்றுள்ளது.. அதேபோல உ.பி பூர்வாஞ்சல் பிராந்தியத்தில் மொத்தம் 139 தொகுதிகளில், பெரும்பான்மையாக பாஜக 96 இடங்களை பெற்றுள்ளது.. பகுஜன் சமாஜ் 3 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும், இதர கட்சிகள் 2 இடங்களையும் பெற்றுள்ளது.

 பிராந்தியம்

பிராந்தியம்

புந்தல்காண்ட் பிராந்தியத்தில் மொத்தமுள்ள 19 தொகுதிகளில், பாஜக 19 இடங்களையும், சமாஜ்வாதி 0, பகுஜன், சமாஜ் 0, காங்கிரஸ் 0 இடங்களை பெற்றுள்ளது.. அதாவது இந்த மண்டலத்தை மொத்தமாக பாஜகவே வாரி சுருட்டி உள்ளது.. தோப் பிராந்தியத்தில் 44 இடங்களில் பாஜக 34 பெற்றுள்ளது.. சமாஜ்வாதி 9, பகுஜன் சமாஜ் 1 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. பிராஜ் பிராந்தியத்தில் மொத்தம் 40 இடங்களில் பெருவரியான இடங்களை பாஜக 34 இடத்தை பெற்றுள்ளது. சமாஜ்வாதி 6, பகுஜன் சமாஜ் 0, காங்கிரஸ் 0 இடங்களை பெற்றுள்ளது.

 பாஜகவே வெற்றி

பாஜகவே வெற்றி

இதுபோன்று அனைத்து பிராந்தியங்களிலும் பெரும்பான்மையான இடங்களில் பாஜகவே முன்னிலை பெற்றுள்ளது.. அதேபோல அனைத்து தொகுதிகளிலும் 2ம் இடத்தில் சமாஜ்வாதி கட்சியே பின்தொடர்ந்து வருகிறது. 3வதாக பகுஜன்சமாஜ் கட்சியும், 4வதாக காங்கிரஸ் என அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. ஆக மொத்தம் இந்தியா டுடே கணிப்பின்படி, பாஜக ஆட்சியே மீண்டும் உபியில் மலரும் என்று உறுதியாக சொல்கிறது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+