பேக்கில் இருந்த "அந்த" பொருள்! அப்பாவுக்கு வந்ததே கோபம்! சொந்த மகளையே கொன்று ஆசிட்டில் கரைத்த கொடூரம்
பெற்ற மகளையே பெற்றோர் கொலை செய்து ஆசிட்டில் கரைத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
லக்னோ: தங்கள் பெண் மற்றொரு இளைஞருடன் உறவில் இருப்பதாகச் சந்தேகித்த பெற்றோர், பெற்ற மகளையே கொடூரமாகக் கொலை செய்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் இன்னுமே கூட பல குடும்பங்களில் தங்கள் குழந்தைகளின் காதலை ஏற்பதில்லை. நாட்டில் 18 வயதைக் கடந்தவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப துணையைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற விதி இருக்கும் போதும், பெற்றோர் காதலை ஏற்பதில்லை.
வேறு சாதி, வேறு மதம் என்று இதற்குப் பெற்றோர் பல காரணங்களைச் சொல்கிறார்கள். அதையும் தாண்டி காதலித்தால் தங்கள் பிள்ளைகளையே கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவங்களும் நடக்கிறது.

உத்தரப் பிரதேசம்
அப்படியொரு மோசமான சம்பவம் தான் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. தங்கள் மகள் மற்றொருவருடன் உறவில் இருப்பதாகச் சந்தேகித்த சொந்த பெற்றோரே மகளைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இந்த பெற்றோர் தங்கள் 21 வயதான பெண்ணின் பையில் கர்ப்ப பரிசோதனை கருவிகளைப் பார்த்து எடுத்துள்ளனர். தங்கள் பெண் ஆண் ஒருவருடன் உறவில் இருப்பதாகச் சந்தேகித்த அவர்கள்,சொந்த மகளையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.

சடலம்
கொலை செய்த பின்னர் உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று இவர்களுக்குத் தெரியவில்லை. இதனால் உதவ தங்கள் உறவினர்களை அழைத்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டவுடன் அவர்களைப் போலீசில் பிடித்துக் கொடுக்காமல்.. உடலை அப்புறப்படுத்த அந்த உறவினர்கள் உதவியுள்ளனர். பெண் உடலை ஆசிட்டில் கரைத்து, உடலை அடையாளம் தெரியாத வகையில் சிதைத்துள்ளனர். பின்னர் அருகே ஒரு இடத்தில் வீசியுள்ளனர்.

புகார்
உத்தரப் பிரதேசத்தில் அலமாபாத் கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரச் செயலை செய்து முடித்துவிட்டு.. அந்த கொடூர தந்தை நரேஷ் எதுவுமே தெரியாதது போல போலீசாரிடம் வந்து தனது மகளைக் காணவில்லை என்று பிப்ரவரி 3ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.. அப்போது கடந்த செவ்வாய்க்கிழமை,அவரது சிதைந்த உடல் கிராமத்திற்கு வெளியே உள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது.

சந்தேகம்
முதற்கட்டமாகப் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். இதனால் போலீசாரின் சந்தேக பார்வை அவர்கள் பக்கம் திரும்பியுள்ளது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்திய நிலையில், அவர்கள் தங்கள் மகளைக் கொன்றதை ஒப்புக் கொண்டனர். தனது மனைவியுடன் இணைந்து மகளைக் கடந்த பிப்.3ஆம் தேதி வீட்டிலேயே கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக் கொண்டார்.

ஆசிட்டில் கரைத்த கொடூரம்
இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "அவர்கள் இருவரும் சேர்ந்து சொந்த மகளையே கொன்றுள்ளனர். மகளின் உடலின் அடையாளத்தை மறைக்க மகளின் உடலை அவர்கள் பேட்டரி அமிலத்தில் போட்டுள்ளனர். இந்த கொலையை மறைக்க நரேஷின் இரண்டு சகோதரர்கள் குலாப் மற்றும் ரமேஷ் ஆகியோரும் அவர்களுக்கு உதவியுள்ளனர்" என்றார். கொலை செய்த பெற்றோர் மற்றும் அவர்களுக்கு உதவிய அந்த இரு உறவினர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

வாக்குமூலம்
நரேஷ் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் எதற்காகக் கொலை செய்தேன் என்பதையும் விளக்கியுள்ளார்... அதாவது, "எனது மகள் பல ஆண்களுடன் மொபைல் போனில் பேசுவார்.. சமீபத்தில் அவரது பேக்கில் சில கர்ப்ப பரிசோதனை கருவிகளை எடுத்தோம்.. இந்த விவகாரத்தில் எனக்கும் மகளுக்கும் சண்டை வந்தது. எனது மகளுக்கு சில ஆண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று நினைத்தேன்.. இதில் ஏற்பட்ட சண்டையில் தான் இப்படி நடந்துவிட்டது" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications