"முடிஞ்சா தொட்டு பார்".. 40 மணி நேரத்தில் உ.பியை புரட்டி போட்ட பிரியங்கா- பெரும் அரசியல் திருப்பம்?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: கடந்த 40 மணி நேரத்தில் இந்திய தேசிய அரசியலை மொத்தமாக தன் பக்கம் திருப்பி இருக்கிறார் பிரியங்கா காந்தி. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் என்ற கட்சியே இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருதி வந்த நிலையில்.. காங்கிரஸ் எங்கும் செல்லவில்லை.. இன்னும் உயிர் இருக்கிறது என்று நிரூபித்து இருக்கிறார் பிரியங்கா காந்தி!

சரியாக தேர்தல் நடக்க இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில்தான் காங்கிரசின் அடையாளமாக உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி முன்னிறுத்தப்பட்டு வருகிறார். உத்தர பிரதேசத்தில் பிரியங்காவை முன்னிறுத்த காங்கிரஸ் கிட்டத்தட்ட 10 வருடங்களாக முயன்று கொண்டு இருக்கிறது. கடந்த 2012 சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த காங். தலைவர்கள் முயன்றனர்.

ஆனால் அப்போது ராகுல் காந்தி தேசிய அரசியல் மீது கவனம் செலுத்தியதால், உத்தர பிரதேசம் மீது கவனம் செலுத்தவில்லை. அதில் இருந்தே காங்கிரஸ் பிரியங்கா காந்தியை முன்னிறுத்த முயன்று கொண்டு இருக்கிறது. உத்தர பிரதேச காங்கிரசின் தொடர் படுதோல்வியை தொடர்ந்து கட்சியை புதுப்பிக்க காங்கிரஸ் தலைமை நல்ல சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது. காங்கிரஸ் எதிர்பார்த்த அந்த நல்ல சந்தர்ப்பம்தான்.. லக்கிம்பூரில் நடந்த விவசாயிகள் போராட்டம்.. கட்சியை எப்படி மீட்டு எடுப்பது.. பிரியங்காவை எப்படி முன்னிறுத்துவது என்று காங்கிரஸ் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நிலையில் அக்கட்சிக்கு கிடைத்த தருணம்தான் இந்த விவசாயிகள் போராட்டம்.

கேட் அண்ட் மவுஸ் கேம்

கேட் அண்ட் மவுஸ் கேம்


கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த செய்தி டிவிட்டரில் வைரலானது. லக்கிம்பூரில் மரணம் பற்றி பெரிய மீடியாக்களில் செய்திகளில் வருவதற்கு முன் பிரியங்கா காந்தி வேகவேகமாக இந்த செய்தி கேட்டு லக்னோவிற்கு விமானம் ஏறினார். அன்று இரவே லக்கிம்பூர் வர அரசியல்வாதிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அமலுக்கு வருவதற்கு முன் அவர் லக்கிம்பூர் செல்ல திட்டமிட்டார்.

லக்னோ

லக்னோ

ஆனால் லக்னோவில் இறங்கியவரை விமான நிலையத்திற்கு வெளியே வந்து உத்தர பிரதேச போலீஸ் அப்புறப்படுத்தியது. அங்கு போலீசிடம் தப்பித்து கார் மூலம் லக்கிம்பூர் புறப்பட்டார் பிரியங்கா. இடையில் நான்கு கார் மாற்றி கிட்டத்தட்ட கேட் அண்ட் மவுஸ் கேம்தான் பிரியங்கா காந்தி ஆடினார். லக்கிம்பூர் எல்லையில் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டவர் கடந்த 40 மணி நேரமாக ஒரே அறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். ஒரு பெண்.. மூத்த அரசியல்வாதி.. ஆண் போலீஸ் அதிகாரிகளால் இரவு நேரத்தில் வாரண்ட் இன்றி அப்புறப்படுத்தப்பட்டது தேசிய அரசியலை உலுக்கி உள்ளது.

தொட்டுப்பார்

தொட்டுப்பார்

பிரியங்கா தேசிய அரசியல் திரும்பி பார்க்க வைத்த நொடி என்றால் அது போலீசாரிடம் பேசிய அந்த நொடிதான்.. நான் லக்கிம்பூர் செல்வேன். என்னை தடுக்க முடியாது. உங்களிடம் என்னை கைது செய்ய வாரண்ட் இருக்கிறதா? இல்லை என்றால் நீங்கள் என்னை கடத்துகிறீர்கள் என்று அர்த்தம். முடிந்தால் என்னை சட்டப்படி கைது செய்யுங்கள்.. இல்லையென்றால் இது ஒரு துன்புறுத்தல்.. இது ஒரு கடத்தல்.. திட்டமிட்ட தாக்குதல். பாலியல் ரீதியான அடக்குமுறை. முடிந்தால்.. உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னை தொட்டுப்பாருங்கள்.. நான் போலீஸ் மீது கேஸ் போட மாட்டேன். என்னை அப்புறப்படுத்த முயலும் அதிகாரிகள் மீது தனி தனியாக கேஸ் போடுவேன் என்று பிரியங்கா போலீசிடம் முழங்கினார். காங்கிரஸ் இளம் தலைவர் ஒருவர் இப்படி போலீசாரிடம் முழங்கியதை.. காங்கிரசை ஜி 23 தலைவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சினிமா படங்களில் வருவதை போன்றதொரு காட்சி அது!

மற்ற கட்சிகளையும் தாக்கினார்

மற்ற கட்சிகளையும் தாக்கினார்

இந்த பயணத்தில் பிரியங்கா காந்தி பாஜகவை மட்டும் அட்டாக் செய்யவில்லை என்பதுதான் முக்கியம். அகிலேஷ் யாதவ் எங்கே.. மாயாவதி எங்கே.. அவர்கள் எங்கே போனார்கள் என்று கேட்டு பிரியங்கா சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளையும் தாக்கினார். தேர்தலுக்கான மிகப்பெரிய சிக்னலை பிரியங்கா லக்கிம்பூரில் கொடுத்துவிட்டார். மக்களுக்கான கட்சி நாங்கள்.. விவசாயிகளுக்கான கட்சி நாங்கள். வேறு எந்த கட்சியும் இங்கே வரவில்லை என்ற தேர்தல் ஸ்டேட்மெண்டை பிரியங்கா முதல் ஆளாக லக்கிம்பூரில் கொடுத்துவிட்டார். இதனால்தான் மறுநாள் அகிலேஷ் பறந்து அடித்துக்கொண்டு லக்கிம்பூர் விரைந்தார்.

 உறுதி

உறுதி

தேர்தலுக்கான முறையான திட்டங்களோடு பிரியங்கா காந்தி இறங்கிவிட்டார் என்பதையே இது காட்டுகிறது. ஆதித்யநாத் மிகவும் வலுவாக இருக்கிறார். கொரோனா மரணங்கள் அவரின் புகழை எதுவும் செய்யவில்லை என்ற நிலையில்தான் விவசாய போராட்டத்தை பிரியங்கா கையில் எடுத்து இருக்கிறார். மமதா பானர்ஜிக்கு புத்ததேவ் பட்டச்சர்யாவை வீழ்த்த எப்படி ஒரு நந்திகிராம் தேவைப்பட்டதோ அப்படி யோகியை வீழ்த்த லக்கிம்பூர் தனக்கு உதவும் என்று நம்புகிறார் பிரியங்கா காந்தி. இதை அவரே கூட மறைமுகமாக சொல்லிவிட்டார். நாங்கள் இந்த பிரச்சனையை மக்களிடம் கொண்டு செல்வோம். விவசாயிகளை பாஜக நசுக்குகிறது. அவர்களை கொல்கிறது. இதை உ.பியின் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்வோம் என்று கூறி உள்ளார்.

துடைப்பம்

துடைப்பம்

சட்டசபை தேர்தலில் காங்கிரசின் தேர்தல் திட்டம் முழுக்க விவசாய போராட்டங்களை நம்பியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் பஞ்சாப் தேர்தலிலும் இந்த லக்கிம்பூர் கண்டிப்பாக எதிரொலிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதனால்தான் நேற்று கைதான பின்பு துடைப்பத்தை எடுத்துக்கொண்டு பிரியங்கா காந்தி வீடியோ போட்டதும் கூட மிகப்பெரிய அரசியல் ஸ்டேட்மெண்டாக பார்க்கப்பட்டது. சாதாரண வீட்டு பெண்கள், கிராமத்து பெண்களோடு கனெக்ட் ஆகும் வகையில் பிரியங்காவின் இந்த வீடியோ அமைந்து இருந்தது. லக்னோவில் தரையிறங்கியதில் இருந்து பிரியங்கா செய்த ஒவ்வொரு மூவிலும் அரசியலும் இருந்தது, விவசாயிகளுக்கான ஆக்ரோஷமும் இருந்தது.

வீடியோ போட்டு காட்டி சரியான வழி

வீடியோ போட்டு காட்டி சரியான வழி

அதோடு பிரியங்கா காந்தி தன்னை அடைத்து இருப்பது ஏன் என்று பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி உள்ளார். மோடி சார், உங்களுடைய அரசு என்னை கடந்த 28 மணி நேரமாக கஸ்டடியில் வைத்து இருக்கிறது. எந்த உத்தரவும், எப்ஐஆரும் இன்றி என்னை கஸ்டடியில் வைத்து இருக்கிறார்கள். ஆனால் விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்களை யாருமே இன்னும் கைது செய்யவில்லை ஏன் என்று சொல்லுங்கள்? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். அதோடு இந்த வீடியோவை பார்த்தீர்களா என்று லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட வீடியோவை ஷேர் செய்து பிரதமர் மோடியிடமே கேள்வி எழுப்பி இருந்தார். இந்த வீடியோவை எப்படியாவது ஒன்றுமில்லாமல் செய்ய பாஜக முயன்ற நிலையில்தான் அதை மோடிக்கே பிரியங்கா காந்தி டேக் செய்து போஸ்ட் செய்தார். அந்த அளவிற்கு பிரியங்காவின் ஒவ்வொரு மூவும் முறையாக திட்டமிட்டு நகர்த்தப்பட்டு வருகிறது.

ஒற்றுமை

ஒற்றுமை

பிரியங்காவின் இந்த அரசியல் செயல்பாடுகள் உத்தர பிரதேசம் தேர்தல் என்பதை தாண்டி, மிகப்பெரிய உட்கட்சி அரசியல் மாற்றத்தையும் காங்கிரஸ் ஏற்படுத்தி உள்ளது. பிரியங்காவிற்கு ஆதரவாக பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் சிங் குரல் கொடுக்கிறார், சட்டீஸ்கர் முதல்வர் பாகல் லக்னோ விமான நிலையத்தில் உட்கார்ந்து இருக்கிறார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குரல் கொடுக்கிறார், காங். ஜி 23 தலைவர் ப. சிதம்பரம் ஆதரவு தருகிறார், பஞ்சாப் நவ்ஜோத் சிங் சித்து உத்தர பிரதேசம் செல்வேன் என்று குரல் கொடுக்கிறார்.. என மொத்த காங்கிரஸ் வடஇந்திய படையும் பிரியங்கா காந்திக்காக களமிறங்கி உள்ளனர். இதுவரை சண்டை போட்டவர்கள் ஒன்றாக பிரியங்காவிற்காக குரல் கொடுத்துள்ளனர்.

முகமாகிறார்

முகமாகிறார்

காங்கிரசில் இதுவரை இல்லாத மாபெரும் ஒற்றுமையை பிரியங்கா காந்தி உருவாக்கி இருக்கிறார். இதனால்தான் ராகுல் காந்தியே பிரியங்காவை பார்த்து பாஜக பயப்படுகிறது என்று பாராட்டி இருந்தார். போலீசிடம் கோபப்படுகிறார், பெண்களிடம் அன்பாக நடக்கிறார், விவசாயிகளிடம் இரக்கத்துடன் நடந்து கொள்கிறார் என்று பிரியங்கா காந்தி ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் ஸ்கோர் செய்ய தொடங்கிவிட்டார்.. ஆக்ரோஷம்.. விறுவிறுப்பு.. இரக்கம் என்று பிரியங்கா காந்தியின் அரசியல் குணம் அனைத்து தரப்பையும் கவனிக்க வைத்துள்ளது. உத்தர பிரதேசத்தில் இல்லாமல் இருந்த காங்கிரஸ்.. பிரியங்கா காந்தியால் தற்போது புதிய எழுச்சி பெற்றுள்ளது...இன்னும் தேர்தல் நடக்க ஒரு வருடம் கூட இல்லாத நிலையில் பிரியாங்காவின் இந்த எழுச்சி உத்தர பிரதேச அரசியலை விறுவிறுப்பாக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+