காதலருடன் சென்ற மனைவியை குழந்தையுடன் சென்று விரட்டி பிடித்த கணவர்.. நடுரோட்டில் சண்டை! பரபரப்பு!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தனது மனைவி அவருடைய முன்னாள் காதலனுடன் தப்பியோடியதை கண்ட கணவர் தனது குழந்தையுடன் விரட்டி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ல ஷிக்கந்த்ரா காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியை சேர்ந்த கணவன்- மனைவிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய கணவர், வீட்டில் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவருடைய மகள் மட்டுமே வீட்டிலிருந்தார். இதையடுத்து மனைவியை வீடு முழுக்க தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

சிறு குழந்தை
சிறு குழந்தை என்பதால் அவரது மகளிடமும் மனைவி குறித்து கேட்கமுடியவில்லை. இதையடுத்து மனைவியை தேட தனது குழந்தையை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இரு சக்கர வாகனத்தில் தன் மனைவி போல் இருக்கும் பெண்ணை கண்டார்.

மனைவி
உடனே வாகனத்தை வேகமாக இயக்கி சற்று அருகே போனால் அது அவருடைய மனைவிதான் என்பது தெரியவந்தது. யாரோ ஒரு ஆணுடன் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு சென்று கொண்டிருந்தார். உடனே மனைவியின் பெயரை கூறி அழைத்து நிற்குமாறு கூறினார் கணவர்.

ஆண் நண்பருடன் தப்பிய மனைவி
இதை கண்ட மனைவி அந்த ஆண் நண்பரிடம் வண்டியை அடித்து ஓட்டுமாறு கூறினார். விடுவாரா கணவர்? அவரும் தன் வாகனத்தை வேகமாக இயக்கினார். ஒரு கட்டத்தில் மனைவி சென்ற வாகனத்தை மடக்கி பிடித்தார். அப்போது ஆத்திரமடைந்த மனைவி, இவரை நான் திருமணத்திற்கு முன்பு காதலித்தேன். ஆனால் என்னை உங்களுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்.

தொழிலதிபருடன் காதல்
இவர் ஒரு தொழிலதிபர். தற்போதும் என்னை ஏற்பதாக கூறுகிறார். எனவே தயவு செய்து என்னை போக விடுங்கள் என கூறினார். மனைவியை அடித்து உதைத்தார் கணவர். மேலும் தங்களுக்கு குழந்தை உள்ளதால் அதன் நலன் கருதி வந்துவிடுமாறும் அழைத்தார். இறுதியில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

4 ஆண்டுகளுக்கு முன்பு இதே சம்பவம்
இதே போல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் கணவர் தனது மனைவி, மகனை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் தப்பி சென்றதை கண்ட மனைவி, அந்த இரு சக்கர வாகனத்தில் துரத்தி பிடித்து சாலையில் சரமாரியாாக தாக்கினார். இந்த சம்பவம் வைரலானது. பின்னர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications