"என்னால பிங்கியை சமாளிக்க முடியலை.. டெய்லி தொந்தரவு".. ஒரு கொலை.. 2 தற்கொலை!

மனைவியை சுட்டுக் கொன்று கணவனும் தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: "என்னால என் பொண்டாட்டி பிங்கியை சமாளிக்க முடியல.. வீட்டில் தினம் தினம் தொந்தரவு" என்று பேஸ்புக் நேரலையில் பதிவிட்ட கணவர், துப்பாக்கியை எடுத்து பிங்கியை சுட்டுவிட்டார்.. பிறகு தானும் அதே துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தியாவிலேயே வன்முறை அதிகமாக தாண்டவமாடுவது உத்திரபிரதேசம்தான்.. இங்கு கொல்லப்படும் உயிர்களும், பலாத்காரம் செய்து எரிக்கப்படும் தளிர்களும் ஏராளம்... லாக்டவுன் என்பதெல்லாம் இந்த கயவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.

 husband commits suicide after murdering his wife in up

இதைதவிர குடும்ப பிரச்சனைகளிலும் ஆளாளுக்கு தற்கொலை செய்து வருவது அதைவிட கவலையை தந்து வருகிறது.. அப்படித்தான், ஒரு சம்பவம் அலிகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

இங்கு வசித்து வருபவர் ஷைலேந்திரா... இவரது தம்பி விஷால்... ஷைலேந்திராவுக்கும் பிங்கி என்ற பெண்ணுக்கும் ஒரு வருஷத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது.. இதையடுத்து, தம்பதியுடன் விஷால், அவரது ஷைலேந்திராவின் அம்மா என அனைவருமே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதில், ஷைலேந்திரா கடுமையான கோபக்காரராம்.. சின்ன வயசில் இருந்தே அம்மாவிடம் தகராறு செய்து கொண்டே இருப்பாராம்.. கல்யாணம் ஆனவுடன் பிங்கியுடன் சண்டை போட ஆரம்பித்துவிட்டார்.

அப்படித்தான் சம்பவத்தன்றும், அம்மாவுடனும், பிங்கியுடனும் ஷைலேந்திரா வழக்கம்போல் தகராறு செய்துள்ளார்.. இவரே வலிய சண்டையையும் போட்டுவிட்டு, உச்சக்கட்ட டென்ஷனுக்கும் போய், தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று பேஸ்புக் நேரலையில் சொன்னார்.. "என் பொண்டாட்டியை சமாளிக்க முடியல.. அவகூட என்னால வாழ முடியல.. வீட்ல ரொம்ப பிரச்சனை.. எனக்கு மன உளைச்சல் அதிகமாகிவிட்டது" என்று பதட்டத்துடன் சொன்னார்.

பிறகு அதே வேகத்தில் துப்பாக்கியை எடுத்து பிங்கியை சுட்டுவிட்டார்.. தானும் சுட்டு கொண்டார்.. துப்பாக்கி சத்தம் கேட்டு, விஷால் அங்கு ஓடிவந்து பார்த்தபோது, அண்ணனும், அண்ணியும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அலறினார்.. 2 பேரின் பிணத்தை கண்டு என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. அந்த துப்பாக்கியை எடுத்து இவரும் சுட்டுக் கொண்டார்.

பிறகு அக்கம்பக்கத்தினர் இது சம்பந்தமாக போலீசுக்கு தெரிவித்தனர்.. அவர்கள் விரைந்து வந்தனர்.. அப்போது பிங்கி உயிர் மட்டும் இருந்தது.. 3 பேரையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்குள் பிங்கி உயிரும் பிரிந்தது. கடைசியில் 3 பேரின் சடலங்களும் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடைசிவரை தம்பதிக்குள் என்ன சண்டை? என தெரியவில்லை.. அவர்களுக்குதான் சண்டை என்றால், பிணங்களை பார்த்த விஷாலுக்கு என்ன ஆச்சு என்ன தெரியவில்லை.. 3 பேரும் ஒரே குடும்பத்தில் இறந்துவிட்டது பரபரப்பை தந்துவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+