ரேபரேலி என்ன? வாரணாசியில் போட்டியிடட்டுமா? தொண்டர்களிடம் ஷாக் கேள்வி கேட்ட பிரியங்கா காந்தி!
லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட கூட தயார் என்று காங். உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video

லக்னோ: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட கூட தயார் என்று காங். உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அங்கு பிரியங்கா காந்தியின் வருகைக்கு பின் காங்கிரஸ் கட்சி மனோரீதியாக பெரிய பலம் பெற்றுள்ளது.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் அங்கு எதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியங்கா காந்தி பேட்டி
இரண்டு நாட்களுக்கு முன் பேட்டியளித்த பிரியங்கா காந்தி, எனக்கும் தேர்தலில் நிற்க விருப்பம் இருக்கிறது. என்னை தேர்தலில் நிற்க சொன்னால் நிற்பேன். கண்டிப்பாக கட்சி சொல்லும் இடத்தில் போட்டியிடுவேன். ஆனாலும் கூட எனக்கு கட்சிக்காக உழைக்கவே அதிக விருப்பம். கட்சியை வளர்க்க வேண்டும், என்று குறிப்பிட்டார்.

ஆலோசனை
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் தொண்டர்களுடன் பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் ஆலோசனை செய்தார். உத்தர பிரதேச வேட்பாளர்கள் குறித்தும், யாரை எங்கு போட்டியிட வைப்பது என்பது குறித்தும் ஆலோசனை செய்தார். உத்தர பிரதேச காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பிரியங்கா மிக முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன கேட்டனர்
இதையடுத்து பிரியங்கா காந்தியிடம் காங்கிரஸ் தொண்டர்கள் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும்படி கோரிக்கை வைத்தனர். ரேபரேலி தொகுதியில் எப்போதும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திதான் போட்டியிடுவார். ஆனால் இந்தமுறை அங்கு பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.

என்ன பதில்
இதற்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை கண்டிப்பாக செய்வேன். ஏன் ரேபரேலியில்தான் போட்டியிட வேண்டுமா? சொல்லுங்கள் வாரணாசியில் கூட போட்டியிடுகிறேன். வாரணாசியில் கூட நான் போட்டியிட தயார்தான், நீங்கள் ரெடியா என்று தொண்டர்களிடம் கேட்டார். அவரின் இந்த கேள்வி தொண்டர்களை மகிழ்ச்சிக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications