தீபாவளி போனஸ் வெறும் ரூ.1,100 தானா.. டோல்கேட் கம்பெனிக்கு ஊழியர்கள் தந்த மரண அடி! அலறிட்டாங்களே
லக்னோ: தீபாவளி போனஸாக வெறும் ரூ.1,100 மட்டுமே தந்ததால் கோபமான டோல்கேட் ஊழியர்கள் திடீரென்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டோல்கேட்டுக்கு வந்த ஆயிரக்கணக்கான வாகனங்களிடம் சுங்கக்கட்டணம் பெறாமல் அனுப்பி வைத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆக்ராவிற்கு எக்ஸ்பிரஸ் வே நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை உத்தர பிரதேச மாநிலம் ஃபதேஹாபாத் என்ற இடத்தின் வழியாக செல்கிறது.

இந்த ஃபதேஹாபாத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டோல்கேட்டை ஸ்ரீ சைன் மற்றும் டாடர் கம்பெனி நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த மார்ச் மாதம் முதல் டோல்கேட்டை நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில் தான் தீபாவளி பண்டிகையையொட்டி டோல்கேட்டை நிர்வகிக்கும் கம்பெனி சார்பில் ஊழியர்களுக்கு போனஸ் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கம்பெனி சார்பில் டோல்கேட்டில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.1,100 போனஸாக வழங்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் அதிகளவில் போனஸை எதிர்பார்த்தனர். ஆனால் கம்பெனி குறைந்த அளவிலான போனஸை மட்டுமே கொடுத்துள்ளது. இதனால் ஊழியர்கள் கடும் கோபமடைந்தனர். நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் ஊழியர்கள் பணியை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைந்த அளவில் போனஸ் தந்து தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்று கம்பெனி மீது ஊழியர்கள் குற்றம்சாட்டினர். நேற்றைய தினம் பணியில் இருந்த 21 ஊழியர்களும் பணியை புறக்கணித்ததோடு மட்டுமின்றி, டோல்கேட்டுக்கு வந்த ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்காமல் ‛ப்ரீ'யாக அனுப்பி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் ஹேப்பியாகினர்.
இதுபற்றி அறிந்த நிறுவனம் பிற டோல்கேட்டில் உள்ள பணியாளர்களை கொண்டு வந்து வேலைக்கு அமர்த்த முயற்சித்தது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி பிற டோல்கேட் ஊழியர்களை பணி செய்ய முடியாமல் தடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்கள், மற்றும் கம்பெனி நிர்வாகத்தை சேர்ந்தவர்களை அழைத்து பேச்சுவார்ததை நடத்தினர். இந்த பேச்சவார்த்தையின்போது கம்பெனி சார்பில் சம்பளத்தில் 10 சதவீதம் போனஸாக வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications