Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி. கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய 'சூரத் ஸ்வீட் பாக்ஸ்'

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய சூரத் ஸ்வீட் பாக்ஸ்

    லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரியை கொலை செய்த கொலையாளிகளை பிடிக்க உதவியதே சூரத் ஸ்வீட் பாக்ஸ் என தெரியவந்துள்ளது.

    இந்து மகாசபை தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கமலேஷ் திவாரி. 2015-ம் ஆண்டு மதம் சார்ந்து இவர் முன்வைத்த விமர்சனம் பெரும் சர்ச்சையானது.

    Kamlesh Tiwari murder case: 3 arrested in Surat with Sweet Box help

    இதன் பின்னர் இந்து மகாசபையில் இருந்து விலகி இந்து சமாஜ் என்ற தனி இயக்கத்தை தொடங்கினார் கமலேஷ் திவாரி. இந்நிலையில் லக்னோவில் அவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

    கமலேஷ் திவாரிக்கு இனிப்புகள் கொடுப்பது போல நடித்து அவரை கொலை செய்தனர் மர்ம நபர்கள். அந்த ஸ்வீட் பாக்ஸில்தான் ஆயுதங்களையும் மறைத்தும் வைத்திருந்தனர் கொலையாளிகள்.

    ஸ்வீட் பாக்ஸை ஆராய்ந்த போலீசார் குஜராத்தின் சூரத்தில் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினரை தொடர்பு கொண்டு உத்தரப்பிரதேச போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சூரத்தில் பிரபலமான ஸ்வீட் கடையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது ஸ்வீட் பாக்ஸ் வாங்கிய நபர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் சூரத்தில் நள்ளிரவில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட நபர்களும் கமலேஷ் திவாரியின் படுகொலையில் தங்களுக்கான தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டதாக உபி டிஜிபி ஓபி சிங் தெரிவித்திருக்கிறார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+