ஷாக்! மீண்டும் "குளியல் வீடியோ" லீக்! பட்டப்பகலில் வீடியோ எடுத்த ஊழியர்! திரண்ட மாணவிகள் போராட்டம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவிகள் திடீரென போராட்டத்தில் இறங்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபின் சத்தீஸ்கர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் குளியல் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பி இருந்தது. சுமார் 40 மாணவிகள் குளிக்கும் வீடியோ லீக் ஆனதாகக் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் சத்தீஸ்கர் பல்கலைக்கழக மாணவிகள் நூற்றுக் கணக்கானோர் திடீரென போராட்டத்தில் இறங்கினார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

உபி ஹாஸ்டல்
இந்தச் சூழலில் அதேபோன்ற ஒரு சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது. அங்கு கான்பூர் நகரில் சாய் நிவாஸ் என்ற பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி, அருகே உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அங்கு பாத் ரூமில் மாணவிகள் குளிப்பதை அங்கு ஊழியராக பணிபுரியும் ஒருவர் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.

குளிக்கும் வீடியோ
இதையடுத்து அங்குள்ள மாணவிகள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். அந்த ஊழியரின் மொபைல் போனில் பல ஆபாச வீடியோக்கள் இருந்து உள்ளது. அதில் பெரும்பாலானவை மாணவிகள் குளிக்கும் போது எடுக்கப்பட்டவை என்று அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். பட்ட பகலில் அந்த ஊழியர் மாணவிகள் குளிக்கும் வீடியோவை எடுத்துள்ளதாக அவர்கள் புகார் அளித்து உள்ளனர்.

போராட்டம்
இது குறித்த அங்குத் தங்கிய மாணவிகள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். மேலும், அங்குள்ள போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மாணவிகள் இது தொடர்பாகப் புகாரும் அளித்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர்.

ஊழியர் கைது
மாணவிகள் குளிக்கும் வீடியோவை எடுத்த ஊழியரைக் கைது செய்துள்ளதாகவும் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும், அவரது மொபைல் போனும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஹாஸ்டல் நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் சம்பவம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தீஸ்கர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் குளியல் வீடியோ லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடன் படிக்கும் மாணவி ஒருவரே அந்த வீடியோவை எடுத்து இருந்தார். அவர் சிம்லாவில் உள்ள இளைஞர் ஒருவருக்கு அந்த வீடியோவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அந்த விவகாரத்தில் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications