Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கிருஷ்ணர் அடம்பிடிக்கிறார்"..ஷாஹி ஈத்கா மசூதி குறித்து சூசகமாக பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கிருஷ்ணர் அடம்பிடிப்பதாகவும் எனவே கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வேண்டும் எனவும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். அதாவது கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்படும் ஷாஹி ஈத்கா மசூதி குறித்து அவர் பேசியிருக்கிறார்.

ராமர் பிறந்ததாக சொல்லப்பட்ட அயோத்தியில், பாபர் மசூதி ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக இந்துத்துவா அமைப்புகள் தொடர் பிரச்சார இயக்கங்களை நடத்தினர். இதனையடுத்து கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதியின் ஒரு பகுதி இந்து அமைப்புகளால் இடிக்கப்பட்டது. இந்த அமைப்புகள், மசூதி இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தம் என்று கொண்டாட, இஸ்லாமிய அமைப்புகள் இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடின. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2019ல் தீர்ப்பளித்தது.

Krishna Is Adamant Yogi Adityanath has spoken about the redemption of Krishna Janmabhoomi


அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் இந்துக்கள் உரிமைகோரும் இடம் அவர்களுக்கே சொந்தம் என்றும், மசூதி கட்ட மாற்று இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து ராமர் கோயிலுக்காக அடிக்கல் நாட்டப்பட்டு, கோயிலின் ஒரு பகுதி முற்றிலுமாக கட்டி முடிக்கப்பட்டது. இதனை கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “ராமஜென்ம பூமியை மீட்டுவிட்டோம் அடுத்து கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்பதுதான் குறிக்கோள்” என்று கூறியிருந்தார். அதாவது, “அயோத்தியில் நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை பார்த்து, நந்தி அடம்பிடிக்க தொடங்கிவிட்டார். எனவே அவருக்கு இருந்த தடைகள் அகற்றப்பட்டுவிட்டன. இப்போது கிருஷ்ணர் அடம்பிடிக்க தொடங்கியுள்ளார்” என்று கூறியுள்ளார்.

நந்தி என்று இவர் கூறியதற்கு அர்த்தம், வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில்தான். இந்த கோயிலை ஒட்டிதான் ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. இந்த மசூதியின் நிலவறையில் கடந்த 1993ம் ஆண்டு வரை பூஜைகள் செய்யப்பட்டு வந்தன என்றும், எனவே பூஜை செய்து வந்தவரின் குடும்பத்தினருக்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் எனவும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், மசூதி வளாக நிலவறையில் இந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த அனுமதி வழங்கியது. அதன்பேரில் பூஜைகளும் நடந்தன. இத்துடன் நிற்காமல், மற்றொரு மனுவை இந்து அமைப்புகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. அதில், மசூதியின் பூட்டப்பட்ட அனைத்து நிலவறைகளிலும் தொல்லியல் துறை ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த விஷயத்தை குறிப்பிடும் விதமாகதான் யோகி ஆதித்யநாத் 'நந்தி' அடம்பிடித்தார் என்று பேசியுள்ளார்.

மட்டுமல்லாது, கிருஷ்ணர் அடம்பிடித்தார் என்றும் யோகி கூறியிருப்பது சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதவாது உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் 1669 - 1970ம் ஆண்டில் அப்போதைய முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின்படி ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டிருக்கிறது. இதன் பக்கத்தில் கிருஷ்ணர் கோயிலும் இருக்கிறது.

பக்கத்தில் கோயில் இருப்பதால், இந்த இடம் கிருஷ்ண ஜென்ம பூமி என்றும், அதில் முகலாயர்கள் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து மசூதியை கட்டியுள்ளனர் என்றும் இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர். இது குறித்து மதுரா நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.

அதில், “வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளது. அந்த மசூதிக்குள் நீதிமன்ற உத்தரவின்படி நடத்திய ஆய்வில் லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற ஒரு ஆய்வை கிருஷ்ணர் ஜென்ம பூமிக்கு அருகில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியிலும் நடத்த உத்தரவிட வேண்டும். கிருஷ்ண ஜென்ம பூமியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 13.37 ஏக்கர் நிலத்தை கத்ரா கேசவ் தேவ் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்” எனவும் இந்து அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனை குறிப்பிடும் விதமாகதான் 'கிருஷ்ணர்' அடம்பிடித்தார் என்று யோகி ஆதித்யநாத் தற்போது பேசியிருக்கிறார். இவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இதுபோன்ற கருத்துக்கள் தீவிரமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+