உ.பி. என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது?.. எங்களை ஏன் தடுக்கிறீர்கள்.. ஆதித்யநாத் அரசுக்கு ராவத் கேள்வி!
லக்னோ: உத்தர பிரதேசம் செல்லும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து தடுக்கப்படுவது ஏன் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் எம்பி சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையில் நடந்த மோதலில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸின் ஜீப் விவசாயிகள் மீது ஏறியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் மீது தற்போது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
இங்கு விவசாயிகளை சந்திக்க சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். மற்ற அரசியல் தலைவர்கள் யாரும் இதுவரை லக்கீம்பூர் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கேள்வி
இந்த நிலையில் லக்கிம்பூர் செல்லும் தலைவர்கள் தடுக்கப்படுவது குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் எம்பி சஞ்சய் ராவத் விமர்சனம் செய்துள்ளார். அதில் உத்தர பிரதேசம் என்ன பாகிஸ்தானில் இருக்கிறதா? அந்த மாநிலத்திற்குள் செல்லும் இந்தியர்களை மட்டும் தடுத்து நிறுத்துவது ஏன்? லக்கிம்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு தொடர்ந்து போடப்பட்டு வருகிறது.

விமர்சனம்
எதை மறைப்பதற்காக அங்கே 144 தடை உத்தரவு போடப்பட்டு வருகிறது. அதோடு ஏன் உத்தர பிரதேசம் செல்லும் அரசியல் தலைவர்களை லக்னோவிலேயே தடுத்து நிறுத்துகிறீர்கள்? அங்கே இது வரை 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அங்கே கொலைக்கு காரணமான நபர்கள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை. கொலைக்கு காரணமான நபர்கள் இன்னும் வெளியில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

விமர்சனம்
எதை மறைப்பதற்காக அங்கே 144 தடை உத்தரவு போடப்பட்டு வருகிறது. அதோடு ஏன் உத்தர பிரதேசம் செல்லும் அரசியல் தலைவர்களை லக்னோவிலேயே தடுத்து நிறுத்துகிறீர்கள்? அங்கே இது வரை 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அங்கே கொலைக்கு காரணமான நபர்கள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை. கொலைக்கு காரணமான நபர்கள் இன்னும் வெளியில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஏன் கைது செய்யப்படவில்லை
ஆனால் இந்த குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. மாறாக விவசாயிகளை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியை கைது செய்துள்ளனர். சட்டீஸ்கர் முதல்வர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அரசியல் தலைவர்களை தடுத்து நிறுத்துவது ஏன்? என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications