மூஸ்வாலா மாடல்.. அதிக், அஸ்ரபை கொல்ல தூண்டிய பிஸ்னோயின் மதவெறி வீடியோ! உபி கொலையாளிகளின் பின்னணி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்பி அதிக் அகமது மற்றும் அஷ்ரப் ஆகியோர் போலீசாரால் அழைத்து செல்லப்பட்டபோது அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொலையாளிகள் மூவரும் சிறையில் இருக்கும் பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னாயின் பேச்சுக்களால் கவரப்பட்டது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பிரபல ரவுடியும் சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.பியுமான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிகின் மகனை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ள அதிக் அனுமதிக்கப்படாத நிலையில், அவரையும் அவரது சகோதரரையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக்ராஜில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அவரிடம் பேட்டியெடுக்க ஏராளமான செய்தியாளர்கள் அங்கு குழுமி இருந்தனர். போலீசார் அழைத்து வரப்படும்போது செய்தியாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு அதிக் பதிலளித்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் துப்பாக்கியால் சுட்டத்தில் குண்டு பாய்ந்து அதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரபும் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பத்திரிகையாளர்களைபோல் கூட்டத்திற்குள் புகுந்தது தெரியவந்தது. இந்த கொலையில் ஈடுபட்டதாக லவ்லேஷ் திவாரி, சன்னி சிங், அருண் மௌரியா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின்போது பல்வேறு தகவல்களை போலீசாரிடம் கொலையாளிகள் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் இந்த கொலை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது சன்னி சிங் என்பது தெரியவந்துள்ளது. பிரபல தாதாவான லாரண்ஸ் பிஸ்னாயின் மதவெறுப்பை பரப்பும் வீடியோக்களை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டவர் சன்னி சிங் என்றும் அவர்கள் விசாரணையில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி மிகப்பெரிய கொலையை செய்ய வேண்டும் என்று சதித்திட்டம் தீட்ட தொடங்கி உள்ளார் சன்னி சிங். அதாவது பஞ்சாபில் மிகவும் பிரபலமான இசைக் கலைஞர் சித்து மூஸ்வாலா கடந்த ஆண்டு மே 29 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை நாட்டையே உலுக்கியதைபோல் ஒரு கொலையை செய்ய வேண்டும் என்று கனவு கண்டு இருக்கிறார் சன்னி சிங். இதற்காக அவர் லவ்லேஷ் திவாரி மற்றும் அருண் மௌரியா ஆகியோரை அழைத்து உள்ளார்.

மூவரும் சேர்ந்து அதிக் அகமதுவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டி உள்ளனர். போலீசார் சோதனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக பத்திரிகையாளர்களைபோன்று வேடம் அணிந்து சனிக்கிழமை இரவு 10 மணியளவில் பிரியாக்ராஜ் மருத்துவமனைக்கு மற்ற பத்திரிகையாளர்களுடன் சென்ற மூவரும் தங்கள் திட்டத்தை செய்து போலீசாரிடம் பிடிப்பட்டு உள்ளனர்.
கொலைக்கு மூளையாக செயல்பட்ட சன்னி சிங் மற்றும் லவ்லேஷ் திவாரி, அருண் மௌரியா ஆகிய 3 பேருமே 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்று கூறப்படுகிறது. கொலை சம்பவத்துக்கு பின் காவல்துறை அவர்களை கைது செய்து அழைத்து செல்லும்போது ஜெய்ஸ்ரீராம் என்று மூவரும் சத்தமாக முழக்கமிட்டு உள்ளனர். 14 நாட்கள் நீதிமன்ற காவலில் பிரதாப்கர் சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டு உள்ளார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications