டாக்டர் என்னை கடிச்ச பாம்பு செத்து போச்சு.. இறந்த நாகப்பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த போதை ஆசாமி
லக்னோ: தன்னை கடித்துவிட்டு இறந்து போன ராஜநாகத்துடன் மருத்துவமனைக்கு வந்த போதை ஆசாமி ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாகவே பாம்பு கடித்துவிட்டால், அந்த பாம்பு என்ன வகையான பாம்பு என்பதை மருத்துவமனையில் தெரிவித்தால் அதற்கேற்ப சிகிச்சை அளிப்பார்கள். சிலருக்கு பாம்பின் வகைகள் தெரியாவிட்டால் தன்னை கடித்த பாம்பை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்துவிடுவர்.
அங்கு அந்த பாம்பை மருத்துவர் பார்த்துவிட்டு கால் நடை மருத்துவருடன் ஆலோசனை செய்துவிட்டு அதற்கேற்ப சிகிச்சை வழங்கப்படும். இதுதான் நடைமுறை.

விஷமுறிவு
பாம்பின் விஷத்திலிருந்து பாம்பு கடிக்கு விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது. இப்படி பாம்புகள் கடித்து இத்தனை மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் காப்பாற்றிவிடலாம். அப்படியிருக்கையில் உத்தரப்பிரதேசத்தில் குஷிநகரில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

சலாவுதீன்
குஷி நகரை சேர்ந்தவர் சலாவுதீன் மன்சூரி. இவருக்கு வயது 35 ஆகிறது. இவர் தனது வீட்டின் தோட்டத்திற்கு சென்ற போது இவரை 3 அடி நீளமுள்ள நாகப்பாம்பு இரு முறை கடித்து காயத்தை ஏற்படுத்திவிட்டது. ஆனால் குடிபோதையில் இருந்த சலாவுதீனின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. மாறாக சலாவுதீனை கடித்த பாம்பு இறந்துவிட்டது.

பாலித்தீன் பை
இந்த பாம்பை ஒரு கவரில் போட்டு குஷிநகரில் உள்ள மருத்துவமனைக்கு சலாவுதீன் கொண்டு வந்தார். போதையில் இருந்த சலாவுதீன் வீட்டில் நடந்தது என்ன என்பதை விவரித்துவிட்டு பாம்புகடிக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டதால் மருத்துவர்கள் அதிர்ந்து போயுள்ளார்கள்.

18 அடி நீளம்
பொதுவாக நாகப்பாம்புகள் 18 அடி நீளம் வரை வளரும். இவை கடித்ததால் பக்கவாதத்தையே உண்டு செய்யும். 15க்கும் மேற்பட்டோரை கொல்லும் ஆற்றல் கொண்டது. ஆனால் சலாவுதீனை கடித்த பாம்பு இறந்தது எப்படி என்பது குறித்து அவரது உறவினர்களிடம் மருத்துவர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள் கூறுகையில் சலாவுதீனை பாம்பு கடித்தவுடன் அதை சரமாரியாக தாக்கி ஒரு பாலித்தீன் பையில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார் என்றனர். இதன் பின்னர் சலாவுதீனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இறந்த பாம்புடன் போதையில் ஒருவர் வந்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications