அந்தரங்க உறுப்பில் சுடசுட எண்ணெய் ஊற்றிய கொடூரம்.. தத்து மகளுக்கு கொடுமை.. வளர்ப்பு தாய் கைது
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் கணவர் தத்தெடுத்த 6 வயது பெண் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் அவரது மனைவி சூடான எண்ணெயை ஊற்றிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அஜய் குமார். இவர் வாகனத்தில் உணவு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பூனம் (வயது 35).
இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதையடுத்து குழந்தையையை தத்தெடுத்து வளர்க்க அஜய் குமார் முடிவு செய்தார். இதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வந்தார்.

தத்து மகள் மீது வெறுப்பு
இந்நிலையில் அஜய் குமார் 6 வயது நிரம்பிய பெண் குழந்தையை தத்தெடுத்தார். இதன்மூலம் பூனம் வளர்ப்பு தாயாகினார். இருப்பினும் சிறுமியை பூனம் விரும்பவில்லை. சிறுமியை தொடர்ந்து அவர் வெறுத்து வந்தார். இதனால் அவர் சிறுமியை பராமரிப்பதில் ஆர்வம் இன்றி இருந்தார். மேலும் அவரை துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் பூனம் சமையல் செய்து கொண்டிருந்தார்.

கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொடூரம்
அப்போது திடீரென்று சிறுமி மீது பூனம் கோபத்தை வெளிப்படுத்தினார். மேலும் வீட்டில் கொதித்து கொண்டிருந்த சமையல் எண்ணெயை எடுத்து அவரது அந்தரங்க உறுப்பில் ஊற்றியுள்ளார். இதனால் குழந்தை அழுது துடித்துள்ளார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த அஜய் குமார், சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வளர்ப்பு தாய் கைது
மேலும் சம்பவம் தொடர்பாக பூனத்துக்கு எதிராக அவரது கணவர் அஜய் குமார் தக்கூர் கஞ்ச் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூனமை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பூனத்தின் செயலை அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

போலீஸ் கூறியது என்ன?
இதுபற்றி தக்கூர் கஞ்ச் போலீஸ் நிலைய அதிகாரி ஹரி சங்கர் கூறுகையில், ‛‛குழந்தை இல்லாததால் 6 மாதத்துக்கு முன்பு சிறுமியை அஜய் குமார் தத்தெடுத்துள்ளார். இதனை பூனம் விரும்பவில்லை. இதனால் கொதிக்கும் எண்ணெயை சிறுமி மீது அவர் ஊற்றியுள்ளார். இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications