முதல் பயணத்திலேயே பரபரப்பு..மோடி தொடங்கி வைத்த கங்கா விலாஸ் கப்பல் தரை தட்டியதா? அதிகாரிகள் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பிரதமர் மோடி கடந்த 13-ஆம் தேதி தொடங்கி வைத்த ஆற்று வழி சொகுசு கப்பல் திட்டமான கங்கா விலாஸ் கப்பல் புறப்பட்ட முதல் பயணத்திலேயே தரை தட்டி நின்றதாக தகவல் பரவி நிலையில் அதனை மறுக்கும் விதமாக அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் வரை சுற்றுலா கப்பல் இயக்கப்படுகிறது. 'கங்கா விலாஸ்' எனப்படும் இந்த சொகுசு கப்பல் பல்வேறு வசதிகளை கொண்டது.

இந்த பயணத்தில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள் உள்ளன. இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் பல்வேறு நதிகள் வழியாக செல்லும் இந்தக் கப்பலை பிரதமர் மோடி கடந்த 13 ஆம் தேதி தொடங்கி வைத்தார். உலகின் மிகப்பெரிய ஆற்று வழி சொகுசு கப்பல் திட்டமாக இந்த கங்கா விலாஸ் பெயர் பெற்றுள்ளது.

3,200 கி.மீ. பயணம்

3,200 கி.மீ. பயணம்

வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் இருந்து கிளம்பிய இந்த சொகுசு கப்பல் காசிப்பூர், பங்சார், பாட்னா வழியாக கொல்கத்தாவை அடையும் என்றும் அதன் பின்னர் வங்காளதேசம் வழியாக மொத்தம் 3,200 கி.மீ. பயணம் செய்து அசாமின் திப்ருகரை மார்ச் 1-ந்தேதி அடையும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. வங்காளதேசத்தில் மட்டும் 15 நாட்கள் இந்த கப்பல் பயணம் செய்ய இருக்கிறது.

50-க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள்

50-க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய நதிகளாக இருக்கும் கங்கை மற்றும் பிரம்மபுத்திராவில் இந்தக் கப்பல் பயணம் செய்கிறது. 50 நாட்கள் நடைபெறும் இந்த சுற்றுலாவில் உலக பாரம்பரிய தலங்களாக அடையாளப்படுத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க முடியும். சுந்தர்பன் டெல்டா மற்றும் காசிரங்கா தேசிய பூங்கா உள்ளிட்ட புகழ்பெற்ற சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்கா வழியாகவும் இந்த சுற்றுலா திட்டமிடப்பட்டு உள்ளது.

ஸ்பா, சலூன், ஜிம் உள்ளிட்ட வசதிகள்

ஸ்பா, சலூன், ஜிம் உள்ளிட்ட வசதிகள்

மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வரும் Antara Luxury River Cruises நிறுவனம் சார்பில் இந்த கப்பல் இயக்கப்படுகிறது. 62 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் உள்ள இந்தக் கப்பலில் மொத்தம் 3 அடுக்குகளில் மொத்தம் 18 அறைகள் கொண்ட இந்த கப்பலில் 36 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். முதற்கட்டமாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த 36 பயணிகள் பயணம் செய்கின்றனர். இதுதவிர 40 பணியாளர்கள் தங்கும் வசதி உள்ளது. கங்கா விலாஸ் சொகுசு கப்பலில் ஸ்பா, சலூன், ஜிம் உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளது.

தரை தட்டி நின்ற கப்பல்?

தரை தட்டி நின்ற கப்பல்?

ஒருநாள் பயணத்துக்கு குறைவாக என்றால் ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை செலவாகும். 51 நாள் பயணத்துக்கு ரூ.20 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல் ஆண்டுக்கு 6 பயணங்களை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. வாய் பிளக்க வைக்கும் பல்வேறு சொகுசு வசதிகளைக் கொண்ட இந்தக் கப்பல் பயணத்தை தொடங்கிய மூன்றாவது நாளான இன்று தரை தட்டியது. பீகாரின் சாப்ரா பகுதியில் ஆழமற்ற நதியில் சென்று கொண்டிருந்த கப்பல் தரை தட்டி நின்றது.

திட்டவட்டமாக மறுக்கும் அதிகாரிகள்

திட்டவட்டமாக மறுக்கும் அதிகாரிகள்

கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிறிய படகுகள் மூலமாக மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. எனினும், இந்த தகவலை உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கப்பல் எங்கும் தரை தட்டி நிற்கவில்லை என்றும் ஏற்கனவே தனது பயண திட்டத்தின் படிதான் பாட்னாவில் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தனது பயண அட்டவணைப்படி சொகுசு கப்பல் புறப்பட்டு செல்லும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+