மூச்சு முட்டிய கும்பமேளா! யோகிக்கு 1 மணி நேரத்தில் 2 முறை போன் அடித்து விசாரித்த பிரதமர் மோடி
லக்னோ: தை அமாவாசையான இன்று, உத்தரப் பிரதேசம் கும்பமேளாவில் புனித நீராட பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால், நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் வரை பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து 1 மணி நேரத்தில் 2 முறை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரதமர் மோடி போன் அடித்து விசாரித்திருக்கிறார்.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வாக தற்போது நடக்கும் கும்பமேளா கருதப்படுகிறது. எனவே திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஜன.13ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் தற்போது வரை சுமார் 16 கோடி பக்தர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இந்த கும்பமேளாவில் குறிப்பிட்ட 6 நாட்கள் மிகவும் புனிதம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதில் முக்கியமான நாள்தான் இன்று. அதாவது தை அமாவாசை.

இந்த நாளில்தான் பிரபஞ்சத்தை கடவுள் உருவாக்கியதாக புராண கதைகள் கூறுகின்றன. எனவே இந்த நாளில் நீராடினால் புனிதமிக்கதாக கருதப்படுகிறது. ஆகவே லட்சக்கணக்கில் துறவிகள் புனித நீராடலில் பங்கேற்றிருக்கின்றனர். அதிக எண்ணிக்கை காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இன்று அதிகாலை புனித நீராடலில் பக்தர்கள் பங்கேற்க முயன்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் மயக்கமடைந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி சுமார் 15 பக்தர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல மேலும் சில பக்தர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இது குறித்து விசாரித்துள்ளார். 1 மணி நேரத்தில் 2 முறை போன் செய்து விசாரித்திருக்கிறார்.
பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஏற்கெனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தெரியும். எனவேதான் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக துணை ராணுவப்படையினர் கும்பமேளாவில் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
அதேநேரம், 1000க்கும் அதிகமான மருத்துவ பணியாளர்களும், 300க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் இதில் சேவையாற்றி வருகின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை போதிய அளவு இல்லாததும், நெரிசல் ஏற்படாதவாறு முன்கூட்டியே பக்தர்களை ஒருங்கிணைக்காததும்தான் உயிரிழப்புக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பக்தர்கள் புனித நீராட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நெரிசல் குறைந்துள்ளதால் தடை நீக்கப்பட்டு பக்தர்கள் நீராட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல்:
பக்தர்கள் அமைதியாகவும், பொறுமையுடனும் நீராட வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதேநேரம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பக்தர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதேபோல திரிவேணி சங்கமத்தில் நீராடுவதால்தான் அதிக நெரிசல் ஏற்படுகிறது. பக்தர்கள், அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கங்கை நதியில் குளிக்க வேண்டும் என்று யோகி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications