மகளை வெட்டி.. உடலை துண்டாக்கி.. சூட்கேஸில் அடைத்து வைத்து வீசி எறிந்த தந்தை.. ஷாக் சம்பவம்
மகளை கொன்று துண்டு துண்டாக வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார்
லக்னோ: மகளை வெட்டி கூறுபோட்டு.. சூட்கேஸ்களில் அடைத்து வைத்து.. மும்பை பகுதிகளில் அந்த உடல்பாகங்களை வீசி எறிந்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜானுபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்விந்த் திவாரி. மனைவி, 4 மகள்களுடன் வசித்து வந்தார்.
ஆனால் 6 மாசத்துக்கு முன்பு, குடும்ப சூழல் காரணமாக, திவாரி, அவரது மூத்த மகள் பிரின்சியை அழைத்து கொண்டு மும்பை வந்துவிட்டார்.

காதல்
ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் திவாரி வேலைக்கு சேர்ந்துள்ளார்.. அதேபோல, பிரின்சியும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இந்த ஆபீசில் பிரின்சி ஒருவரை காதலித்துள்ளார்.. ஆனால் காதலன் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என தெரிகிறது.. இந்த காதல் விவகாரம் திவாரிக்கு தெரியவந்ததும், மகளுக்கு தடை சொல்லி உள்ளார்... ஆனால் மகளோ காதலில் மிக தீவிரமாக இருக்கவும், திவாரியால் அதை தாங்கி கொள்ளவே முடியவில்லை.

திவாரி
இன்னொரு சமுதாயத்தை சேர்ந்த நபர் என்பதாலேயே அந்த காதலனை திவாரிக்கு பிடிக்கவே இல்லை... இதனால் மகளை கொலை செய்யலாம் என்று திவாரி முடிவெடுத்தார்.. அதன்படியே பெற்ற மகள் என்றும் பாராமல், அவரை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளார்.. பிறகு சூட்கேஸில் அந்த உடல் பாகங்களை 3 சூட்கேஸ்களில் அடைத்து வைத்து கொண்டு, பிறகு ஒரு ஆட்டோ பிடித்து டிட்வாலா ரயில்வே ஸ்டேஷன் சென்றார்.

சூட்கேஸ்
அங்கிருந்து ரயில் ஏறி கல்யாண் நகர் வந்தார்.. திரும்பவும் அங்கிருந்து ஆட்டோக்களில் ஏறி.. அந்த உடல் பாகங்களை பல இடங்களிலும் வீசியிருக்கிறார். அப்படி ஒரு ஆட்டோவில் சூட்கேசுடன் ஏறும்போதுதான், "என்ன இவ்வளவு நாத்தம் அடிக்கிறதே.. சூட்கேசில் என்ன இருக்கு" என்று ஆட்டோ டிரைவர் கேட்டுள்ளார். இதற்கு எதையோ சொல்லி திவாரி சமாளித்துவிட்டு, அந்த சூட்கேஸை அதே ஆட்டோவிலேயே வைத்துவிட்டு போய்விட்டார்.

போலீஸ் விசாரணை
பிறகு ஆட்டோ டிரைவர்தான் சூட்கேஸ் குறித்து போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளார். விரைந்து வந்த போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்தபோதுதான், உடல் பாகங்கள் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர். அதன்பிறகு அந்த ஆட்டோ டிரைவர் உதவியுடன் கல்யாண் ரயில்வே ஸ்டேஷனில் இருந்த சிசிடிவியை பார்த்து திவாரியை கைது செய்தனர். ஆனால் பிரின்சியின் பாதி உடலை காணவில்லையாம்.

உடல் பாகங்கள்
முதலில் விஷயத்தை மறுத்த திவாரி, இறுதியில் மகளை கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். மகளை எப்படி கொன்றார், உடல் பாகங்களை எங்கெங்கே வீசினார் என்று திவாரியிடம் விசாரணை தொடர்கிறது. பெற்ற மகளை கூறுகூறாக வெட்டி, சூட்கேஸில் அதனை அடைத்து, மும்பை பகுதி முழுவதும் உடல்பாகங்களை வீசியெறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications