உபா சட்டத்தில் கைதான.. பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனுக்கு ஜாமீன் மறுப்பு.. நீதிபதி கூறிய காரணம்
லக்னோ: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சித்திக் கப்பன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் வழக்கை மதுரா நீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியது.
அப்போது உயிரிழந்த அந்த பெண்ணின் குடும்பத்தினரைக் கேரளாவைச் சேர்ந்த சில பத்திரிக்கையாளர்கள் சந்திக்கச் சென்றனர். அப்போது வழியிலேயே சித்திக் கப்பன் உள்ளிட்ட சில பத்திரிக்கையாளர்களை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்தனர்,

பத்திரிக்கையாளர் கைது
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் மீது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அக்டோபர் 7ஆம் தேதி, அவர் மீது உபா சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில். அவர் ஜாமீன் கோரி மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது

ஜாமீன் மனு.
வழக்கை விசாரித்த நீதிபதி அனில் குமார் பாண்டே ஜாமீன் மனுவை ரத்து செய்தார். நீதிபதி தனது உத்தரவில், "குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பத்திரிகையாளர் எனக் கூறினார். அவர் கைது செய்யப்பட்ட போது, தேஜஸ் செய்தி நிறுவனத்தில் பணிபுரிவதாக ஐடி கார்ட் வைத்திருந்தார். ஆனால் தேஜஸ் செய்தி நிறுவனம் கடந்த டிசம்பர் 2018 இல் மூடப்பட்டுவிட்டது. அவரிடம் இருந்து சில தடை செய்யப்பட்ட புத்தகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜாமீன் மறுப்பு
மேலும், அவர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்ததும் தெரியவந்துள்ளது. அவரது லேப்டாப்பில் வன்முறையைத் தூண்டும் வகையில் சில கட்டுரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் தலைவர்களுடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார். சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக அவருக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் முதல் பணம் அனுப்பப்பட்டுள்ளன. அவர் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையாக உள்ளதால், ஜாமீன் வழக்கு காரணங்கள் எதுவும் இல்லை" என்று கூறினார்,

அதிருப்தி
தேசத் துரோகம் மற்றும் பயங்கரவாத நிதியுதவி அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக சுமார் எட்டு மாதங்களாகப் பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் சிறையில் உள்ளார். இது குறித்து சித்தின் கப்பன் வழக்கறிஞர் மதுவன் தத் சதுர்வேதி கூறுகையில், "முறையான விசாரணை இல்லாமல் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. அவர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உறுப்பினர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அதேநேரம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்ட அமைப்பும் இல்லை" .
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications