ஹரியானாவில் காங்கிரஸ் கதையை முடிச்சது போதாதாம்.. ஜார்க்கண்ட் தேர்தலிலும் மாயாவதி கட்சி போட்டியாம்!
லக்னோ: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். ஹரியானா தேர்தலில் தலித் வாக்குகளை இந்திய தேசிய லோக் தள் கட்சியுடன் கூட்டணி வைத்த பகுஜன் சமாஜ் கட்சி பிரித்துவிட்டதும் காங்கிரஸின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக முன்வைக்கப்படும் நிலையில் ஜார்க்கண்ட் தேர்தலிலும் போட்டியிடுவதாக மாயாவதி அறிவித்திருப்பது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணியை கலக்கமடைய வைத்துள்ளது.
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. ஹரியானாவில் பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணியானது ஆட்சி அமைக்கிறது.

இதனையடுத்து மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது. இரு மாநில தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கக் கூடும் என்பது எதிர்பார்ப்பு.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே போட்டி உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் ஆர்ஜேடி, ஏஜேயூஎஸ் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் ஜேடியூ உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இரு கூட்டணிகளும் தயார் நிலையில் இருக்கின்றன. பாஜக எந்த நேரத்திலும் வேட்பாளர் பட்டியலை வெளியிடக் கூடும் என்கின்றன தகவல்கள். இரு கூட்டணிகளிலும் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்படுவர்கள் கட்சி தாவவும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த பின்னணியில் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளார் அக்கட்சித் தலைவர் மாயாவதி. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடிகள், தலித்துகள், சிறுபான்மையினர் வாக்குகளை நம்பி களம் காண்கிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. பழங்குடிகளிடையே பிளவை உருவாக்கி வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து முஸ்லிம்கள் ஊடுருவிவிட்டதாக பிரசாரம் செய்து ஓபிசி, உயர்ஜாதி வாக்குகளை ஒருங்கிணைக்கிறது பாஜக. இந்த களேபரத்தில் தலித்துகளின் வாக்குகளை கூறு போடும் வகையில் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார் மாயாவதி. இதனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி கலக்கமடைந்துள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications