2 கட்ட தேர்தல் முடிவை இப்பவே சொல்லட்டுமா? மோடி “சதம்” அடித்துவிட்டார்.. அமித் ஷா பரபர பேச்சு!
லக்னோ: நடைபெற்று முடிந்துள்ள 2 கட்ட லோக்சபா தேர்தலில் 190 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இப்போதே பாஜக சதம் அடித்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

முதற்கட்ட வாக்குப்பதிவில் 102 தொகுதிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 88 தொகுதிகளிலும் என மொத்தம் இதுவரை 190 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. மொத்தம் 543 தொகுதிகள் உள்ள நிலையில் மீதும் உள்ள தொகுதிகளுக்கு மே 7, மே 13, மே 20, மே 26, ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அமித் ஷா பிரச்சாரம்: பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
மோடி சதம்: அப்போது பேசிய அமித் ஷா, “இதுவரை இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதன் முடிவை அறிய விரும்புகிறீர்களா? மோடி ஜி சென்சுரி கடந்துள்ளார். ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகிய இரண்டு இளவரசர்கள் இன்னும் தங்கள் கணக்கையே தொடங்கவில்லை. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உத்தர பிரதேசத்தில் 80 இடங்களில் பாஜக வெற்றி பெறுகிறது.
தடை செய்யப்பட்ட PFIஐ காங்கிரஸ் ஆதரிக்கிறது.. ஒரு சீட்டில் வெல்வதற்காக சரணடைந்துவிட்டது: மோடி தாக்கு!
இந்தத் தேர்தல் பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேறவும், நாட்டைப் பாதுகாப்பாகவும், வளமாகவும் மாற்றுவதற்கும் நடக்கும் தேர்தல். கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கும் ராமர் கோயில் கட்டியவர்களுக்கும் இடையேயான தேர்தல்.
அகிலேஷ் யாதவிடம் கேட்கிறேன்: யாதவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுகிறது சமாஜ்வாதி கட்சி. முலாயம் சிங் முதல்வரானார், பின்னர் அவரது மகன் முதல்வரானார். முலாயம் சிங் யாதவ் மறைவுக்குப் பிறகு மருமகள் எம்.பி ஆனார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்த முறை, அகிலேஷ் யாதவ் கன்னோஜ் தொகுதியிலும், டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியிலும், அக்ஷய் யாதவ் ஃபிரோசாபாத் தொகுதியிலும், ஆதித்யா யாதவ் புடான் தொகுதியிலும் தர்மேந்திர யாதவ் அசம்கர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
நான் அகிலேஷ் யாதவிடம் கேட்க விரும்புகிறேன். உங்கள் குடும்பத்திற்கு வெளியே யாதவர்களை நீங்கள் காணவில்லையா? அவர்கள் யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல. இந்த குடும்பக் கட்சிகளை முடித்துவிட்டு, பிரதமர் மோடியின் தலைமையில் மெயின்புரியில் தாமரை மலர வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாமரையை மலரச் செய்து குடும்ப அரசியலை விரட்டி அடிப்போம்.
மோடி கியாரண்டி: பிற்படுத்தப்பட்டோர் என்ற பெயரில் ராகுல் பொய்களை பரப்பி வருகிறார். பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால் நாட்டிலேயே இடஒதுக்கீட்டை அகற்றி விடும் என்று அவர் கூறுகிறார். நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் இரண்டு முறை ஆட்சி செய்தோம் என்பது அவருக்கு புரியவில்லை. நரேந்திர மோடி இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீடுகளை பாஜக அகற்றாது, வேறு யாரையும் அகற்றவும் விடமாட்டோம் என்று இன்று மோடி கியாரண்டி தருகிறேன்” என்று அமித் ஷா பேசினார்.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
மேற்காசிய போர் பதற்றம்.. அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி இன்று ஆலோசனை! -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு











Click it and Unblock the Notifications