Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தடை செய்யப்பட்ட PFIஐ காங்கிரஸ் ஆதரிக்கிறது.. ஒரு சீட்டில் வெல்வதற்காக சரணடைந்துவிட்டது: மோடி தாக்கு!

Subscribe to Oneindia Tamil

பெலகாவி: வாக்குகளுக்காக காங்கிரஸ் கட்சி, தடை செய்யப்பட்ட தேசவிரோத அமைப்பான பிஎஃப்ஐக்கு ஆதரவு அளித்து வருகிறது. வயநாடு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக சரணடைந்துள்ளது என காட்டமாகப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதையடுத்து 2வது கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜூன் 1 ஆம் தேதி வரை இன்னும் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Congress party supports banned PFI to win Wayanad seat PM Modi slams at karnataka


பிரதமர் மோடி பிரச்சாரம்: இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவியில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது பேசிய பிரதமர் மோடி, “மக்களின் சொத்துகளை அதிகரிக்க பாஜக வேலை செய்கிறது. ஆனால் காங்கிரஸின் இளவரசர் மற்றும் அவரது சகோதரி இருவரும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததால் நாட்டை எக்ஸ்ரே செய்யவோம் என்று கூறுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியினர் உங்களின் சொத்துகள், வங்கி லாக்கர்கள், நிலங்கள், வாகனங்கள், பெண்களின் நகைகள், தங்கம், தாலி ஆகியவைகளையும் சோதனை செய்வார்கள். அவர்கள் உங்கள் வீடுகளை சோதனை செய்து சொத்துக்களை அபகரிப்பார்கள். அப்படி கைப்பற்றிய சொத்துகளை தங்களின் அன்புக்குரிய வாக்கு வங்கிக்கு பிரித்துக்கொடுக்க அவர்கள் விரும்புகிறார்கள்.

நான் உயிருடன் இருக்கும் வரை: நீங்கள் இந்த ஊழலை அனுமதிப்பீர்களா? நான் காங்கிரஸ் கட்சியை எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். இந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள். நான் உயிரோடு இருக்கும் வரை இதனை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். நமது வரலாற்றை வாக்கு வங்கியால் காங்கிரஸ் சிதைத்துள்ளது. இன்றும் கூட, காங்கிரஸ் இளவரசர் அந்தப் பாவத்தைச் செய்கிறார்.

ராஜாக்கள் ஏழை மக்களின் நிலங்கள் மற்றும் சொத்துக்களை அபகரித்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சத்திரபதி சிவாஜி, கிட்டூர் ராணி சன்னம்மா போன்ற சிறந்த ஆளுமைகளை காங்கிரஸ் இளவரசர் அவமதித்துள்ளார். ராஜாக்களை பற்றி குறை கூறும் இளவரசரின் வாய், இந்திய வரலாற்றில் நவாப்புகள், நிஜாம்கள், சுல்தான்கள் மற்றும் பாட்ஷாக்கள் செய்த அடாவடிகளை, அநியாயங்களை பற்றி பேசாமல் மவுனம் சாதிக்கிறது.

இந்தியா கூட்டணி ஜெயித்தால் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் வருவார்கள்.. பிரதமர் மோடி பேச்சை கவனிச்சீங்களா?


அவுரங்கசீப்: முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் அநியாயங்களை ராகுல் காந்தியால் சொல்ல முடியாது. அவுரங்கசீப் நமது பல கோயில்களை அசுத்தப்படுத்தி அழித்தார். அவுரங்கசீப்பை கொண்டாடும் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக ராஜாக்களுக்கு எதிராக பேச துணிவிருக்கும் காங்கிரஸ் கட்சியினரு நவாப்புகள், சுல்தான்கள் மற்றும் பாட்ஷாக்களுக்கு எதிராக பேச முடிவதில்லை.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து விட்டது. அவர்களைப் பொறுத்தவரை நேஹா போன்ற மகள்களின் உயிர்களுக்கு மதிப்பில்லை. பெங்களூரு கபேவில் குண்டு வெடித்ததும் காங்கிரஸ் அரசு முதலில் அதில் அக்கறை காட்டவில்லை. சிலிண்டர் வெடித்துவிட்டதாகவே முதலில் சொன்னார்கள். நீங்கள் (காங்கிரஸ்) ஏன் நாட்டு மக்களிடம் பொய் சொல்கிறீர்கள். உங்களால் முடியவில்லை என்றால் வெளியேறி வீட்டுக்குச் செல்லுங்கள்.

பி.எஃப்.ஐக்கு ஆதரவு: வாக்குகளுக்காக காங்கிரஸ் கட்சி, தடை செய்யப்பட்ட தீவிரவாதத்தை ஆதரிக்கும் தேசவிரோத அமைப்பான பிஎஃப்ஐக்கு ஆதரவு அளித்து வருகிறது. வயநாடு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக நீங்கள் அவர்களிடம் சரணடைவீர்களா? பாஜக பிஎஃப்ஐ-யைத் தடை செய்து, அதன் தலைவர்களைச் சிறையில் அடைத்துள்ளது” எனப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+