ஷாக் சம்பவம்! மாடுகளை ஏற்றி சென்றதாக உபி-இல் இஸ்லாமிய இளைஞர் மீது பெல்டால் கொடூர தாக்குதல்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக் கறி ஏற்றிச் சென்றதாகக் கூறி முஸ்லீம் இளைஞர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாட்டுக் கறி பிரச்சினை பேசுபொருளாகி வருகிறது. மாட்டுக் கறி எடுத்துச் செல்வதாகக் கூறி, குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தும் சம்பவமும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
வட மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்த நிலையில். கடந்த சில மாதங்களாக இது போன்ற தாக்குதல்கள் சற்றே குறைந்திருந்தது. இந்தச் சூழலில் மாட்டுக்கறி ஏற்றிச் சென்றதாக மீண்டும் அப்பாவி இளைஞர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விலங்குகளின் சடலங்களை ஏற்றிச் சென்ற பிக்-அப் வேன் ஓட்டுநரை கிராம மக்கள் சிலர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். வாகனத்தில் விலங்குகளின் எலும்புகள் மற்றும் சடலங்களைக் கண்ட கிராம மக்கள் அதை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து மாட்டிறைச்சி மற்றும் மாடுகளைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டி 30 வயதான ஒரு முஸ்லீம் இளைஞரை அந்த கும்பல் சிறைபிடித்து அவரைத் தாக்கியது.

வீடியோ
மேலும், இது தொடர்பாக வீடியோ ஒன்றும் இணையத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. அதில் முஸ்லீம் இளைஞர் ஒருவரின் சட்டை கிழிக்கப்பட்டுள்ளது. மேலும், அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை தாக்குவதும் தெளிவாகப் பதிவாகி உள்ளது. அந்த வீடியோவில் தன்னை விட்டுவிடும்படி அந்த இளைஞர் கெஞ்சுகிறார். ஆனால், அதைத் துளியும் காதில் போட்டுக் கொள்ளாமல் அந்த கும்பல் அவரை பெல்ட்டால் தாக்குகிறது. ஒரு நபர் மட்டும் தாக்குதலை தடுக்க முற்படும் நிலையில், அவரையும் அந்த கும்மல் ஒதுக்கித் தள்ளிவிட்டது.

என்ன வாகனம்
இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அடையாளம் தெரியாத பல நபர்கள் மீது உத்தரப் பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த வாகனம் இறந்த விலங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்தும் ஒரு கிராமத்தின் தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதி என்பதைக் கண்டறியப்பட்டுள்ளது, தாக்குதலில் அந்த இளைஞருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேச போலீஸ்
இது தொடர்பாக மதுரா காவல்துறை கண்காணிப்பாளர் மார்தந்த் பிரகாஷ் சிங் கூறுகையில், "மதுராவில் உள்ள கோவர்தன் பகுதியைச் சேர்ந்தவர் ராமேஷ்வர் வால்மீகி, இவர் விலங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்த மாவட்ட பஞ்சாயத்தில் உரிமம் பெற்றுள்ளார். மதுராவில் இருந்து அருகில் உள்ள மாவட்டத்திற்கு வாகனத்தை அனுப்பியிருந்தார். எங்கள் முதற்கட்ட விசாரணையில் வாகனத்தில் அதில் மாடுகளோ, மாட்டிறைச்சியோ எதுவும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நாங்கள் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம்" என்றார். வலதுசாரி குழுக்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 16 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ
மேலும், இது தொடர்பாக வீடியோ ஒன்றும் இணையத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. அதில் முஸ்லீம் இளைஞர் ஒருவரின் சட்டை கிழிக்கப்பட்டுள்ளது. மேலும், அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை தாக்குவதும் தெளிவாகப் பதிவாகி உள்ளது. அந்த வீடியோவில் தன்னை விட்டுவிடும்படி அந்த இளைஞர் கெஞ்சுகிறார். ஆனால், அதைத் துளியும் காதில் போட்டுக் கொள்ளாமல் அந்த கும்பல் அவரை பெல்ட்டால் தாக்குகிறது. ஒரு நபர் மட்டும் தாக்குதலை முற்படும் நிலையில், ஆனால் அவரை அந்த கும்மல் ஒதுக்கித் தள்ளிவிட்டது.












Click it and Unblock the Notifications