உ.பி.யில் அட்டூழியம்- தலித் மாணவிகளின் உடைகளை களைந்து ஆதிக்க ஜாதி மாணவிகளுக்கு கொடுத்த ஆசிரியர்கள்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆதிக்க ஜாதி மாணவிகள் போட்டோ எடுக்க தலித் மாணவிகள் இருவரின் உடைகளை களைந்து ஆசிரியர்கள் கொடுத்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜாதிய ஆதிக்கமும் ஜாதிய வன்முறைகளும் தலைவிரித்தாடும் வட இந்திய மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் ஒன்று. இம்மாநிலத்தின் ஹபூர் பகுதியில் தொடக்கப் பள்ளி ஒன்றில் நடைபெற்ற சம்பவமானது நாட்டையே கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஹபூர் பள்ளியில் ஜூலை 11-ந் தேதி மாணவிகளை ஆசிரியர்கள் புகைப்படம் எடுத்தனர். அப்போது 4-ம் வகுப்பு படித்த தலித் மாணவிகள் இருவரின் உடைகளை களைந்து அந்த மாணவிகளின் சீருடைகளை ஆதிக்க ஜாதி மாணவிகளுக்கு கொடுத்து போடச் சொல்லி இருக்கின்றனர் ஆசிரியர்கள். இந்த கொடுமை குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் போலீசார்
எடுக்கவில்லை. அதற்கு மாறாக அரசு அதிகாரிகளால் 2 ஆசிரியர்களும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை சோஷித்கிராந்தி தள் என்ற அரசுசாரா அமைப்பு சமூக வலைதளங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்தது.
பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், நாங்கள் போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால் முதல் தகவல் அறிக்கையை கூட போலீசார் பதிவு செய்யவில்லை. இந்தப் பிரச்சனையை அனைத்து தரப்புமே மூடி மறைக்கத்தான் பார்க்கிறது. எங்களையும் இது குறித்து பேசக் கூடாது என மிரட்டுகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் புகார் கொடுத்துள்ளோம் என்றார்.
தற்போது இந்த் விவகாரத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கையில் எடுத்துள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications