புதிய கல்விக்கொள்கை “சமஸ்கிருதம்” போன்ற மொழிகளை ஊக்குவிக்கும்.. நாடு முன்னேறும் - மோடி நம்பிக்கை
லக்னோ: புதிய கல்விக்கொள்கையால் சமஸ்கிருதம் போன்ற பழமையான மொழிகளுக்கு ஊக்கம் கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உயர்கல்வி குறித்த கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து ஒரு லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் அட்சய பாத்திரா திட்டத்தையையும் அவர் தொடங்கி வைத்தார்.

புதிய கல்விக்கொள்கை
அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "புதிய கல்விக்கொள்கை குறுகிய மனப்பான்மை கொண்ட சிந்தனைகளில் இருந்து கல்வியை மீட்பதற்கு உதவும். புதிய கல்விக்கொள்கையின் அடிப்படை நோக்கமே இதுதான். 21 ஆம் நூற்றாண்டுக்கு தேவையான புதிய சிந்தனைகளை கொண்டதாக புதிய தேசிய கல்விக்கொள்கை இருக்கும்.

நாட்டை முன்னேற்றும்
இந்த கல்விக்கொள்கை மாணவர்களை வெறும் பட்டப்படிப்புக்கு தயார் செய்வதோடு மட்டும் நின்றுவிடாது. மனித வளங்களை வைத்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லும் அடிப்படையிலேயே இந்த புதிய கல்விக்கொள்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் தங்களுடைய தாய் மொழிகளில் கல்வியை கற்பதற்கான வாய்ப்பை புதிய தேசியக் கல்விக் கொள்கை வழங்குகிறது.

சமஸ்கிருதம்
இது சமஸ்கிருதம் உள்ளிட்ட தொன்மையான மொழிகளுக்கு ஊக்கம் அளிக்கும். நாட்டின் ஒட்டுமொத்த கல்வி கட்டமைப்பையும் இந்த புதிய தேசிய கல்விக்கொள்கை மாற்றி அமைக்கும்." என்றார். மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சித்து வருகிறது.

கடும் எதிர்ப்பு
ஆனால், அதில் இடம்பெற்றுள்ள மும்மொழிக்கொள்கை, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, சிறுவயதிலேயே தொழிற்பயிற்சி வழங்குவது தேசியமயமான கல்விக்கொள்கை போன்றவற்றுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக தேசிய கல்விக்கொள்கை வரைவு வெளியானவுடன் அதன் மீதான எதிர்ப்பு பன்மடங்கு அதிகரித்தது.

மாநில கல்விக்கொள்கை
குறிப்பாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புதிய தேசிய கல்விக்கொள்கையை கடுமையாக விமர்சித்தனர். இது இந்தியை திணிப்பதாகவும், மாணவர்கள் இடைநிற்றலை அதிகரிப்பதாக குற்றம்சாட்டின. ஆட்சிக்கு வந்தபிறகும் புதிய கல்விக்கொள்கையை கடுமையாக எதிர்த்து வரும் திமுக மாநிலக் கல்விக்கொள்கையை தயாரிக்க குழுவையும் அமைத்து இருக்கிறது.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications