Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”கியான்வாபி மசூதியை இடிக்க வேண்டும்” வாரணாசி நீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய வழக்கு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: கியான்வாபி மசூதியை இடிக்க வேண்டும் என வாரணாசி விரைவு நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இதற்கு அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப் கட்டிய கியான்வாபி மசூதி இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக பேசப்பட்டு வந்த இந்த மசூதிதான் தற்போது சர்ச்சைகளுக்கு இலக்காகி இருக்கிறது.

வாரணாசியில் வழக்கு

வாரணாசியில் வழக்கு

பாபர் மசூதி தடைக்கு பிறகு அடுத்த இலக்கு என பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியையும், மதுராவில் உள்ள ஈத்கா மசூதியையும் சுட்டிக்காட்டினர். இந்த நிலையில் கியான்வாபி மசூதியின் வளாகத்துடைய வெளிப்புறச் சுவற்றில் உள்ள சிங்கார கவுரி அம்மன் சிலைக்கு ஆண்டுக்கு 5 முறை பூஜை நடத்த அனுமதி வழங்கக்கோரி வாரணாசி நீதிமன்றத்தில் பெண்கள் 5 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

வீடியோ ஆய்வு

வீடியோ ஆய்வு

இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதியில் வீடியோ ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்து குழு ஒன்றையும் அமைத்தது. இதனை எதிர்த்து மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இந்தஜாமியா கமிட்டி சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 17 ஆம் தேதிக்குள் ஆய்வை நிறைவு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையிட்டது.

உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்றம் மறுப்பு

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது வழக்கு குறித்த ஆவணங்களை பார்க்காமல் கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறினர். இதனை அடுத்து 14 ஆம் தேதி மசூதியில் எதிர்ப்புகளை மீறி கள ஆய்வு தொடங்கியது.

ஆய்வு நிறைவு

ஆய்வு நிறைவு

இந்த ஆய்வுக்குழுவில் வழக்கறிஞர் ஆணையர் அஜய்குமார் மிஸ்ரா, சிறப்பு வழக்கறிஞர் விஷால் சிங், துணை வழக்கறிஞர் அஜய் பிரதாப் சிங், மனுதாரர்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் என 36 பேர் ஆய்வுக்காக கியான்வாபி மசூதிக்கு சென்றனர். அங்கு அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

சிவலிங்கம்

சிவலிங்கம்

3 நாட்கள் நடத்தப்பட்ட ஆய்வில் கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்குமாறும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

 உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

இது தொடர்பாக வழக்கை கடந்த சில நாட்களுக்கு முன் விசாரித்த உச்சநீதிமன்றம், மசூதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கியதுடன் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்ட இடத்தை பாதுகாக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இவ்வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட், சூர்யகாந்த், நரசிம்மா அமர்வு வழக்கை வாரணாசி சிவில் நீதிமன்றத்திலிருந்து அனுபவம் வாய்ந்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டார்.

வழிபட அனுமதி கோரி வழக்கு

வழிபட அனுமதி கோரி வழக்கு

இந்த நிலையில் விஷ்வா வேதிக் சனாதன சங்கத்தின் தலைவர் ஜிதேந்திர சிங், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், "கியான்வாபி மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதித்து, மசூதி வளாகத்தை தங்களிடம் ஒப்படைத்து, அங்கு கண்டெடுக்கப்பட்டு இருக்கும் சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்க வேண்டும் என புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், மசூதியில் சிவலிங்கம் என்று சொல்லப்படும் பகுதியை வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை மட்டும் விசாரிக்க நீதிமன்றம் ஏற்றது.

மசூதியை இடிக்க வழக்கு

மசூதியை இடிக்க வழக்கு

இந்த நிலையில் ஆதி விஸ்வேஸ்வர் விராஜ்மான் என்பவர் தனது நண்பர் கிரண் சிங் மூலமாக மேலும் ஒரு புதிய வழக்கை வாரணாசி விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்து இருக்கிறார். அதாவது தற்போதைய இடத்தில் அமைந்திருக்கும் கியான்வாபி மசூதியை இடிக்க வேண்டும் என அந்த வழக்கில் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+