Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தாஜ்மஹாலுக்கு போட்டி!" ஆக்ராவில் புதிய பளிங்கு கல் பிரம்மாண்டம்! கட்டி முடிக்கவே 100 ஆண்டுகள் ஆச்சு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ஆக்ராவில் தாஜ்மஹாலுக்கு போட்டியாக இப்போது அதேபோன்ற ஒரு பளிங்கு கல்லறை கட்டப்பட்டுள்ளது. அதைப் பார்க்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அது என்ன கல்லறை.. இதன் சிறப்புகள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.

ஆக்ரா என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது தாஜ்மஹால் தான்.. முழுக்க முழுக்க வெள்ளை பளிங்குக் கற்களால் ஆன தாஜ் மஹாலை பார்க்க ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் ஆக்ரா செல்கிறார்கள்.

New White Marble Marvel Opens In Agra creates Competition for Taj Mahal

இதற்கிடையே இப்போது தாஜ்மஹாலுக்கு போட்டியாக ஆக்ராவில் புதிய பளிங்கு கட்டிடம் ஒன்று தயாராகி உள்ளது. இந்த புதிய பளிங்கு கட்டிடம் எதற்காகக் கட்டப்பட்டது.. இதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

புதிய கட்டுமானம்: ஆக்ராவில் அமைந்துள்ள இந்த புதிய வெள்ளை பளிங்கு கட்டிடத்தைக் கட்டி முடிக்க சுமார் 104 ஆண்டுகள் ஆகியுள்ளது. தாஜ் மஹாலில் இருந்து வெறும் 12 கிமீ தொலைவில் உள்ள இந்தக் கட்டிடம் அங்கு வரும் ஆன்மீக சுற்றுலாப் பயணிகளைப் பெரியளவில் கவர்கிறது. ஆக்ராவில் உள்ள சோமி பாக் என்ற பகுதியில் ராதாசோமி பிரிவின் நிறுவனரின் சமாதியின் மேல் தான் இது கட்டப்பட்டுள்ளது.

இந்த வெள்ளை பளிங்குக் கட்டிடம் ஆக்ராவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் பெரியளவில் கவர்ந்துள்ளது. தாஜ்மஹாலுக்கு அருகே கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டம் நகரத்தின் கட்டிடக்கலை சிறப்பை சேர்க்கிறது.

100 ஆண்டுகள்: தாஜ்மஹால் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதை ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் 22 ஆண்டுகளில் கட்டி முடித்தனர். ஆனால், இந்த சோமி பாக் கல்லறையின் கட்டுமானம் 100 ஆண்டுகளுக்கு மேல் நீட்டித்தது. இத்தனை காலம் ஆனாலும் ராதாசேமியை பின்பற்றுவோர் நம்பிக்கையுடன் இந்த கட்டுமானத்தைக் கட்டி முடித்துள்ளனர். இது அவரது அர்ப்பணிப்புக்குச் சான்றாக இருப்பதாகக் கூறுகிறார் ராதாசேமியை பின்பற்றுவோர்.

193 அடி உயரமான இந்த கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து பளிங்குக் கற்களும் ராஜஸ்தானில் உள்ள மக்ரானாவிலிருந்து எடுத்து வரப்பட்டதாாகும். இது சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் மிக முக்கியமான கட்டுமானங்களில் ஒன்று எனக் கூறலாம்.

யாருடைய கல்லறை: இந்த கல்லறை ராதா சோமி என்ற மத நம்பிக்கையை நிறுவிய பரம் புருஷ் பூரன் தனி சுவாமிஜி மகாராஜுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆக்ராவின் தயால்பாக் பகுதியில் உள்ள சோமி பாக் பகுதியில் இந்த பிரமாண்ட கல்லறை அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த சமாதிக்கு வந்து செல்கிறார்கள். ஆக்ராவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தாஜ் மாஹாலூடன் இந்த கல்லறைக்கும் தவறாமல் சென்று வருகிறார்களாம்.

முதலில் இது வெறும் கல்லைக் கொண்டு அமைந்த எளிய கல்லறையாகவே இருந்தது.. 1904ஆம் ஆண்டில், அலகாபாத்தைச் சேர்ந்த ஒரு கட்டிடக் கலைஞர் இந்த பிரம்மாண்ட கல்லறையின் கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளார். இருப்பினும், ஆரம்பித்த உடனேயே அதன் கட்டுமானம் சில வருடங்கள் நிறுத்தப்பட்டது.. ஆனால் 1922இல் இதன் கட்டுமானம் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், பல நூறு பேரின் கடின உழைப்பில் இது இப்போது நிறைவடைந்துள்ளது.

3 தலைமுறை: இதன் கட்டுமானத்திற்குப் பெரியளவில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை. பல நூறு பேர் கடினமாக உழைத்து இதைக் கட்டியுள்ளனர். தாத்தா- மகன்- பேரன் என சில குடும்பங்களில் 3 தலைமுறையினர் கூட இதில் வேலை செய்துள்ளனராம். 31.4-அடி தங்க முலாம் பூசப்பட்ட இதன் சிகரம் தாஜ்மஹாலை விட உயரமானது என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+