அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள் தீவிரம்! கும்பாபிஷேகம் முடிந்த கையோடு.. களமிறங்கும் அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், கோயிலின் முழு கட்டுமானமும் முடிவதற்கு முன்னர் இந்த விழா நடைபறுவதாக பலரும் கூறியிருந்தனர். இது குறித்து அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா விளக்கமளித்திருக்கிறார்.

அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் இன்று குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

Nirupendra Mishra, Chairman of the Temple Construction Committee, explains about the Ayodhya Ram Temple constructions

இன்று பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ம் தேதி பல்வேறு மாநிலங்கள் பொது விடுமுறையை அறிவித்திருக்கின்றன. மட்டுமல்லாது கும்பாபிஷேக விழாவை நேரலையில் காண பாஜக ஆளும் மாநிலங்களில், பல்வேறு கோயில்களிலும் எல்இடி திரை வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் மறுபுறம், கோயிலின் கட்டுமான பணிகள் முழுமை பெறாததற்கு முன்னரே கும்பாபிஷேக விழா நடத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இதற்கு கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா விளக்கமளித்திருக்கிறார். அதாவது, "கோயிலின் கும்பாபிஷேக விழா நிறைவடைந்த மறுநாளே கட்டுமான பணிகள் தொடங்கப்படும். அயோத்தி கோயில் வளாகத்தில் மேலும் 7 கோயில்கள் கட்டப்பட உள்ளன. இந்த ஆண்டே முழு கோயிலையும் கட்டி முடிக்கும் உற்சாகத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

குழந்தை ராமர் சிலையின் பிரதிஷ்டை விழா மதியம் 1 மணிக்கு நிறைவடைகிறது. அதன் பின்னர் சுமார் 7 ஆயிரம் பக்தர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+