கிராமப்புறங்களுக்கு தூய்மையான குடிநீர்.. உ.பி வரலாற்றில் மேலும் ஒரு மைல்கல்! அதிகாரிகள் நெகிழ்ச்சி
லக்னோ: கிராமங்களுக்கு தூய்மையான குடிநீர் சேவை வழங்குவதில் உத்தரப் பிரதேச மாநிலம் முன்னிலையில் இருக்கிறது என அம்மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

அதில் முக்கியமான திட்டம்தான் கிராமபுறங்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டம். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "உத்தரப்பிரதேசம் அதன் கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. சொல்லப்போனால் கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில் உத்தரப் பிரதேசம்தான் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த சாதனைகளுக்கு பின்னால் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அயராத உழைப்பு இருக்கிறது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, உத்தரப் பிரதேசம் 1.6 கோடிக்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்கியுள்ளது. இது இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிகமான எண்ணிக்கையாகும். கடந்த 2019ம் ஆண்டு வரை, மாநிலத்தில் 5,16,221 கிராமப்புற குடும்பங்கள் மட்டுமே தங்கள் வீடுகளில் குழாய் நீர் இணைப்புகளை வைத்திருந்தார்கள்.
ஆனால் அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் மிஷன், 1.6 மக்களுக்கு குடிநீர் இணைப்பை வழங்கிய வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தத் திட்டம் நீர் விநியோகத்தை இணைக்க உதவியது மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் முழு வாழ்க்கையையும் மாற்றியுள்ளது. மாநிலத்தில் உள்ள நமாமி கங்கை மற்றும் கிராமப்புற நீர் வழங்கல் துறையின் உழைப்பு இந்த வெற்றிக்கு மிக அடிப்படையானதாகும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications