உ.பி.யில் அடுத்தடுத்து...மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுப் படுகொலை- 4 பேர் கைது
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் நேற்று இரவு மூத்த பத்திரிகையாளர் ரதன் சிங் (வயது 45) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படுகொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி அருகே உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி விக்ரம் ஜோஷி என்ற பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். தமது இரு மகள்கள் முன்னிலையிலேயே மர்ம நபர்களால் விக்ரம் ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் நேற்று இரவு ரதன் சிங் என்ற மற்றொரு பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.. ரதன் சிங், இந்தி டிவி சேனல் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தினேஷ் சிங், அரவிந்த்சிங், சுனீல் சிங் மற்றும் மோதி சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், பத்திரிகையாளர் ரதன்சிங்குக்கும் தினேஷ் சிங்குக்கும் நிலம் தொடர்பான தகராறு இருந்துள்ளது. இதில்தான் ரதன்சிங் சுட்டுக் கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ரதன்சிங் குடும்பத்துக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு ரூ10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications