Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான்: தமிழில் ட்வீட் செய்த யோகி ஆதித்யநாத்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி நடபெறும் நிலையில், 'நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான்' என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தை இந்தியா அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வருகிறது.

சுதந்திர அமிர்த பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக காசி தமிழ் சங்கமம் 2022- நிகழ்ச்சி உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்க உள்ளது.

ஒரே பாரதம், உன்னத பாரதம்

ஒரே பாரதம், உன்னத பாரதம்

காசிக்கும் தமிழுக்கும் இருக்கும் பழமையான நாகரீக தொடர்பை உணர்த்தும் வகையிலும் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வின் கீழ், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்த விஷேச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்திற்கும் காசிக்கும் உள்ள பழமையான நாகரீக தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் அடுத்த மாதம் 16 ஆம் தேதி வரை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இரு மாநில மக்களுக்கு இடையேயான உறவு

இரு மாநில மக்களுக்கு இடையேயான உறவு

சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து இந்த காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறது. நாட்டின் கலாசாரங்கள், பன்முகத்தன்மை கல்வி சார்ந்த பரிமாற்றங்கள், கருத்தரங்குகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த இரு மாநில மக்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது இந்த நிகழ்ச்சிகளின் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

முதல் குழு வாரணாசி பயணம்

முதல் குழு வாரணாசி பயணம்

காசி- தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து முதல் குழு இன்று ரயில் மூலம் வாரணாசிக்கு செல்கிறது. 216 பேர் இடம் பெற்றிருக்கும் இந்தக் குழுவில் ராமேஸ்வரத்தில் இருந்து 35 பேர், திருச்சியில் இருந்து 103 பேர், சென்னையில் இருந்து 78 பேர் பயணம் செய்கின்றனர். காசி - தமிழ்சங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குழுவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார்.

ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான்

ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான்

தொடர்ந்து ஆளுநர் ஆர் என் ரவி எழும்பூரில் இருந்து கொடி அசைத்து இந்தக் குழுவை வழி அனுப்பி வைக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் கலந்து கொள்கிறார். காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மொத்தம் 2,592 பேர் பயணம் செய்ய உள்ளனர். இந்த நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் ட்வீட் போட்ட யோகி

தமிழில் ட்வீட் போட்ட யோகி

இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பதாவது:- காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான். 'காசி தமிழ் சங்கமம்' ஆனது இந்த 'ஒன்றுபட்ட நிலை'யின் புனிதமான மற்றும் வளமான உணர்வை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான ஊடகம்" என்று கூறியிருக்கிறார். யோகி ஆதித்யநாத் இந்த பதிவை தமிழில் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+