ரயில் பயணிக்கு வழங்கப்பட்ட சமோசா.. என்ன இது! பான்பராக் பேப்பரா?.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு
லக்னோ: லக்னோ நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சமோசாவில் மஞ்சள் நிறத்தில் பேப்பர் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரயில்வே சமீப காலமாக பயணிகளை கவர நவீன முறையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ரயிலில் புதுப்புது வசதிகளும் கொண்டு வரப்படுகின்றன.
அதேபோல் தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் உணவும் வழங்கப்படுகிறது. ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் உணவு மற்றும் சுற்றுலா கழகத்தால் அமர்த்தப்படும் கேண்டீன் உரிமையாளர்களுக்கே ரயில்களில் உணவு சமைக்கவும் விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

ரயில்களில் வழங்கப்படும் உணவு..
ரயில்களில் வழங்கப்படும் இந்த உணவுகள் சில சமயங்களில் ஒட்டுமொத்த பயணத்தை ரணமாக்கும் வகையில் அமைந்துவிடுவதாக பயணிகள் தரப்பில் அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இத்தகைய புகார்களுக்கு பதிலளிக்கும் ரயில்வே, உணவுகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சொல்லி வந்தாலும், அவ்வப்போது ரயிலில் வழங்கப்படும் உணவில் புகார்கள் வருவது வாடிக்கையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ரயிலில் வழங்கப்பட்ட சமோசா
இதேபோலத்தான் கடந்த சில தினங்களுகு முன்பாக மும்பை - லக்னோ இடையே செல்லும் ரயிலில் பயணித்த போது, ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தால் வழங்கப்பட்ட சமோசாவில் 'மஞ்சள் நிற தாள்' இருந்ததாக குற்றம் சாட்டினார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் ஐஆர்சிடிசியை டேக் செய்து பதிவிட்டு இருந்தார்.

மஞ்சள் நிறத்தில் பேப்பர்
அஜிகுமார் என்ற அந்த பயணி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், ''நான் லக்னோவுக்கு சென்று கொண்டிருக்கிறேன். பயணத்திற்கு இடையே சாப்பிடுவதற்காக ஒரு சமோசா வாங்கினேன். பாதி சமோசா சாப்பிட்ட பிறகு மஞ்சள் நிற பேப்பர் உள்ளே இருப்பதை பார்க்க முடிந்தது. ஐ.ஆர்.சி.டிசி பேன்ட்ரி ஊழியர் இந்த சமோசாவை வழங்கினார்'' என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

ஐஆர்சிடிசி வருத்தம்
இதையடுத்து, ஐ.ஆர்.சி.டி.சியும் இது தொடர்பாக உடனடியாக கருத்தை பதிவிட்டுள்ளது. அதில், தங்களின் பயண எண் மற்றும் மொபைல் எண்ணை டிஎம்-ல் தெரிவிக்குமாறும் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதகவும் பதிவிடப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி தரப்பில் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தாலும் நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

கட்டணம் வசூல் செய்வதிலேயே கவனம்
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் கூறுகையில், ''ரயில்வேயில் தற்போது வழங்கப்படும் உணவுகள் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது. அனைத்திற்கும் வெறும் கட்டணம் வசூல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்" என பதிவிட்டுள்ளார். சமோசாவில் காணப்படும் மஞ்சள் நிற பேப்பர் குட்காவின் கிழிந்த கவர் என்றும் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பு
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பானது மற்றும் மலிவானது என்பதால் ஏழை எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்களும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் ரயில் பயணத்தில் வழங்கப்படும் உணவை கூடுதல் தரத்துடன் வழங்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications