கும்பமேளா கூட்டத்தால்.. ரயில் இன்ஜின் பெட்டிக்குள் ஏறி இடம்பிடித்த பயணிகள்! வீடியோவை பாருங்க
லக்னோ: வாரணாசியில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வு இந்துக்களின் புனித நிகழ்வாகும். இந்தாண்டு ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா நடைபெறுகிறது. கும்பமேளாவை முன்னிட்டு கோடிக்கணக்கான பக்தர்கள் வாரணாசிக்கு சென்றுள்ளனர். வாரணாசிக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறப்பு ரயில்களிலும் இடம் கிடைக்காமல் பயணிகள் அல்லல்படுகிறார்கள். இதை எடுத்துக்காட்டும் விதமாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பமேளா என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உத்தர பிரதேசம் வாரணாசியில் கலந்து கொள்ள செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

அதிலும் முக்கியமான விசேஷ நாட்களில் வாரணாசி செல்லும் ரயில்கள், பேருந்துகளில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுகிறது. ரயில்களில் முன்பதிவு செய்த பெட்டியில் கூட சாதாரண டிக்கெட் எடுத்துள்ள பயணிகள் ஆக்கிரமித்துக்கொள்வதாக புக்கிங் செய்து பயணிக்கும் பயணிகள் முன்வைக்கும் தொடர் குற்றச்சாட்டாக உள்ளது.
இத்தகைய சூழலில் தான், வாரணாசி செல்லும் ரயில் ஒன்றில் இடம் கிடைக்காத நிலையில், பயணிகள் ரயிலின் என்ஜின் பெட்டிக்குள் டிரைவருக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் இடத்தில் ஏறும் காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. ரயிலில் என்ஜின் பெட்டிக்குள் டிரைவரை தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என்ற நிலையில், பயணிகள் மூட்டை முடிச்சுகளுடன் பெட்டிக்குள் ஏறுவதை பார்க்க முடிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக பயணிகளை எச்சரித்து இறக்கிவிட்டுள்ளனர். ரயிலின் என்ஜின் பெட்டிக்குள் பயணிகள் ஏறும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரயில் என்ஜின் பெட்டிக்குள் ஏறும் பயணிகள் வேறு யாரும் வர முடியாதபடி லாக் செய்தும் அமர்ந்துள்ளனர்.
ये तो हाल है रेलवे का. यात्री ट्रेन के इंजन में घुसे जा रहे हैं. तस्वीर वाराणसी की है.
— Priya singh (@priyarajputlive) February 9, 2025
यह महाकुंभ स्पेशल ट्रेन का हाल है. यात्रियों ने इंजन में घुस पॉयलट के जगह पर क़ब्ज़ा कर लिया .फिर जैसे तैसे RPF ने इन जबरन घुसे यात्रियों को बाहर निकाला. pic.twitter.com/CD94RG77lU
பிறகு வந்த போலீசார் ஒவ்வொரு பயணியையும் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு எச்சரித்து அனுப்புகிறார். கடந்த 8 ஆம் தேதி அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. பிரயாக்ராஜ்ஜில் இருந்து வரணாசிக்கு சென்ற ரயிலில், பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போதுதான் பயணிகள் இப்படி என்ஜின் பெட்டிக்குள் ஆக்கிரமித்து ஏறியதாக ரயில்வே போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. பொதுப்பெட்டி போல ரயிலின் என்ஜின் பெட்டிக்குள் பயணிகள் சர்வசாதாரணமாக ஏறியிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 20 பயணிகள் அந்த என்ஜின் பெட்டிக்குள் ஏறிய நிலையில் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், " ரயில் என்ஜின் பெட்டியில் தான் ரயிலை இயக்குவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளும் உள்ளன. எனவே இவற்றில் சாதாரண பயணிகள் ஏறுவது என்பது ஆபத்தானது. என்ஜின் பெட்டிக்குள் ஏறிய பயணிகளை பிற பெட்டிகளில் ஏறி பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்" என்றனர்.












Click it and Unblock the Notifications