வட இந்தியர்களை இழிவுபடுத்தும் தென்னிந்தியா, திமுக, காங்கிரஸ்-.உ.பி. பிரசாரத்தில் மோடி பகீர்!
லக்னோ: வட இந்தியர்களை, உத்தரப் பிரதேச மாநில மக்களை “இந்தியா” கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இழிவாக பேசுவதாக உ.பி. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.
லோக்சபா தேர்தல் இதுவரை 4 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களின் 131 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவடைந்துவிட்டது. எஞ்சிய 3 கட்ட தேர்தல்களும் வட இந்திய மாநிலங்களில்தான் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் உ.பி. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தென்னிந்தியாவில் உத்தரப்பிரதேச மாநில மக்களை இழிவாக பேசுகின்றனர். தென்னிந்தியாவில் ஓட்டுக்காக உ.பி. மக்களை இழிவுபடுத்துகின்றனர்.
ராகுல் காந்தி மிகவும் ஆபத்தானவர்.. இந்தியா கூட்டணியின் தலைவர்கள் தென்னிந்தியாவில் மோசமான வார்த்தைகளால் உ.பி. மக்களை விமர்சித்து பேசுகின்றனர். இந்தியா கூட்டணியின் தலைவர்கள் சனாதன தர்மத்தை இழிவுபடுத்துகின்றனர்.
இந்தியா கூட்டணி கட்சிகளான தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் இடதுசாரிகள், கர்நாடகா, தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிகள் உ.பி. மக்களுக்கு எதிராக இழிவாக விமர்சிக்கின்றனர். உங்களை இழிவாக பேசும் "இந்தியா" கூட்டணி தலைவர்களுக்காக நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்? இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஜாதியைப் பாதுகாக்கும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். ஆனால் சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசிவிட்டதாக பாஜகவினர் பொய் பிரசாரம் செய்தனர். அத்துடன் பிரதமர் மோடி முதல் அனைத்து அமைச்சர்களும் இதனையே 'இந்தியா” கூட்டணிக்கு எதிரான ஆயுதமாகவும் கையில் எடுத்தனர்.
அதேபோல தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் படுகொலை செய்யப்படுவதாக திடீரென யூடியூபர் மணீஷ் காஷ்யப் உள்ளிட்டோர் வதந்தி பரப்பினர். இதனால் தென்னிந்தியா- வட இந்தியா என பிரச்சனை வெடித்தது. பீகார் உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து அரசு அதிகாரிகள் குழு தமிழ்நாட்டுக்கு வருகை தந்து வட மாநிலத்தவர் நிலைமை குறித்து ஆராய்ந்துவிட்டு சென்றது. இப்படி வதந்தி பரப்பிய மணீஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்த மணீஷ் காஷ்யப் சில நாட்களுக்கு முன்னர்தான் பாஜகவில் இணைந்தார்.
தற்போது பிரதமர் மோடியும் வட இந்தியா - தென் இந்தியா என பிரிவினைவாதம் பேசி இருக்கிறார். ஏற்கனவே முஸ்லிம்கள் குறித்து கடுமையாக விமர்சித்து வரும் பிரதமர் மோடி தற்போது, தென்னிந்திய மாநிலங்களில் வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டதால் தென்னிந்தியர்கள் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார் என்பது காங்கிரஸின் குற்றச்சாட்டு.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications