Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனமுருகிய பிரதமர்.. அயோத்தியில் தரையில் படுத்து பாலராமரை வணங்கிய மோடி!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: நாளை மறுநாள் மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அயோத்தி பாலராமர் கோயிலில் பிரதமர் மோடி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ராமரை வழிப்பட்டிருக்கிறார்.

கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 88 லோக்சபா தொகுதிகளுக்கு ஏப்.26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.

PM Modi worships at Ayodhya Ram temple as 3rd phase of Lok Sabha election is to be held tomorrow

இந்நிலையில் இன்றுடன் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரைகள் முடிந்திருக்கின்றன. மே 7ம் தேதியன்று அதாவது நாளை மறுநாள் 12 மாநிலங்களில் 94 லோக்சபா தொகுதிகளுக்கு 3ம் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பாஜகவுக்கு சாதகமான மாநிலங்களில் இந்த முறை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் பாஜக முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்திருக்கிறது. எனவே இந்த வெற்றியை வசப்படுத்திட இன்று அயோத்தி பால ராமர் கோயிலில் பிரதமர் வழிபாடு செய்திருக்கிறார். உ.பியில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மாலை கோயிலுக்கு சென்ற மோடி, பாலராமரின் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வழிபட்டிருக்கிறார்.

இந்த தேர்தல் பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் முக்கியானதாகும். இந்த முறை அவர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், மோடிக்கு பின்னர் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் தலைவர் என்கிற பெருமையை பெறுவார். அதேபோல 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா வருகிறது.

PM Modi worships at Ayodhya Ram temple as 3rd phase of Lok Sabha election is to be held tomorrow

எனவே இதை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியமாகும். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கிற பின்னணியில்தான் மோடி ராமர் கோயிலில் வழிபட்டிருக்கிறார்.

ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கோயிலின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி பாலராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+