பிரியங்கா வைத்த "குறி".. பெண்கள் ஓட்டை அள்ள அதிரடி.. 2 மெகா அறிவிப்புகள்.. ஜெர்க் ஆகும் பாஜக.!

பெண்களுக்கு 3 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என பிரியங்கா தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி, வருடந்தோறும் பெண்களுக்கு 3 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், மாநில அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார்.

உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு முதல் பாதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது... பரபரப்பாக நடக்க போகும் தேர்தலில் பலமுனைப் போட்டிகள் நிலவி வருகின்றன.

இவைகளில் முக்கியமாக பார்க்கப்படுவது உத்தரபிரதேச மாநில தேர்தல்தான்.. இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமாகவும், 403 உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய சட்டப்பேரவையாகவும் உத்தரப்பிரதேசம் திகழ்ந்து வருகிறது.... மேலும் 403 சட்டமன்ற உறுப்பினர் இடங்கள் இங்கு இருக்கின்றன.

 பெரிய தொகுதி

பெரிய தொகுதி

இதில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை வென்றால் மட்டுமே அதிக மாநிலங்களவை உறுப்பினர்களை பெறமுடியும்... அதனால், இந்த மாநிலத்தில் அபார வெற்றிபெறும் கட்சியே மத்தியிலும் ஆட்சியமைக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.. அந்த வகையில், பாஜக - சமாஜ்வாதி கட்சி - பகுஜன் சமாஜ் என்ற 3 பெரும் கட்சிகளும் படுமும்முரமாக களமிறங்க உள்ளன.. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் தீவிர முனைப்புடன் வேலை பார்த்து வருகிறது..

 5 எம்எல்ஏக்கள்

5 எம்எல்ஏக்கள்

இதற்காகவே பிரியங்கா காந்தி, இந்த ஒரு வருஷமாகவே உபியில் அடிக்கடி முகாமிட்டு, களப்பணியை முடுக்கிவிட்டு, கட்சியையும் பலப்படுத்தி வருகிறார். ஏனென்றால், ஒருகாலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இதே உபியில் இப்போது, வெறும் 5 எம்எல்ஏக்கள் மட்டும்தான் உள்ளனர்.. அதனால்தான், உபியில் காங்கிரஸை தூக்கி நிறுத்துவதற்காக, 2 வருஷத்துக்கு முன்னாடியே, பிரியங்காவை மாநில பொறுப்பாளராக கட்சி மேலிடம் நியமித்திருந்தது..

 வியூகங்கள்

வியூகங்கள்

அதற்கேற்றபடி பிரியங்காவும், மக்களை சந்தித்து குறைகளை கேட்பது, யாத்திரை நடத்துவது என்ற பல அதிரடிகளை கையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடுத்தக்கட்ட நகர்வாக பிரியங்காவின் அரசியல் பெண்களை நோக்கி நகர்கிறது.. பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்..

 40 சதவீதம்

40 சதவீதம்

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பிரியங்கா பேசும்போது, "பெண்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அவர்கள் முன்னேற வேண்டும். இந்த முடிவு உத்தர பிரதேசத்தின் பெண்களுக்கானது. இந்த முடிவு மாற்றத்தை விரும்பும் பெண்களுக்கானது.. உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 400 தொகுதிகளில் 40 சதவீதத்தை பெண்கள் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது" என்று கூறி பாஜகவுக்கு ஷாக் தந்தார்..

 போதனைகள்

போதனைகள்

நேற்றைய தினம் உபி முதல்வர் யோகியின் சொந்த ஊரான கோரக்பூருக்கு பிரியங்கா வந்திருந்தார்.. அங்கு நடந்த பேரணிக்கு பிறகு பிரியங்கா பேசும்போது, "ஆன்மிக குரு கோரக்நாதரின் போதனைகளை மீறி யோகி ஆதித்யநாத் செயல்படுகிறார்... பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக துன்புறுத்தப்படுகின்றனர்.. பாஜக அவலத்தை தட்டிக்கேட்போர் சிறையில் அடைக்கப்படுகின்றனர்...

 மருத்துவ செலவு

மருத்துவ செலவு

ஆனால், உபியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்... கோதுமை மற்றும் நெல் ஆகியவை குவிண்டால் 2,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும்.. தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவதோடு, 20 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்... அங்கன்வாடி ஊழியர்களுக்கு 10 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு இலவச மருத்துவ செலவை அரசே ஏற்கும்... கொரோனா தொற்றால் இறந்தோர் குடும்பத்துக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும்" என்று அதிரடியாக அறிவித்தார்.

 2 அதிரடி

2 அதிரடி

இப்போது மேலும் சில வாக்குறுதிகளை பிரியங்கா ட்வீட் போட்டு தெரிவித்துள்ளார்.. அதன்படி, உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி, வருடந்தோறும் பெண்களுக்கு 3 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், மாநில அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று பதிவிட்டுள்ளார்.. பிரியங்காவின் ஒவ்வொரு அறிவிப்புகளும், பெண்களின் வாக்குகளை கவரும்படியாக அமைந்து வருவது பாஜகவை திகைத்து பார்க்க வைத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+